279 IPC in Tamil
பொதுவாக பலருக்கு சட்டம் பற்றி எதுவும் தெரியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் நிறைய இருக்கிறது. இதை பற்றி வழக்கறிங்கர்களுக்கு தான் நிறைய தெரிந்திருக்கும். இருந்தாலும் நாம் சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது ஒன்று தவறு இல்லை. அப்பொழுது தான் சமூகத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழும்போது அந்த பிரச்சனையை சட்டம் வழியாக மிக சரியான முறையில் எதிர்கொள்ள உதவியாக இருக்கும். ஆகவே ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு சட்டத்தை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வோம். அதற்கு எங்கள் பொதுநலம். காம் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரி இன்றைய பதிவில் Section 279 IPC என்றால் என்ன?, இந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருடினால் அல்லது ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்குமாம்..!
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279 விளக்கம்
மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓடுவது சவாரி செய்வதும் குற்றமாகும், இந்தக் குற்றத்திற்கு 6 மாதங்கள் வரை சிறைக்காவல் அல்லது 1000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.
ஒரு பொதுவழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் ஓட்டுதல் அல்லது செலுத்துதல்
எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாம் அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாம் என்ற ஒரு முறையில் ஏதாவதொரு வாகனத்தை ஏதாவதொரு பொது வழியில் கட்டுக்கடங்கா கடும் வேகத்தில் அல்லது கவனக்குறைவாக ஓட்டினால் அல்லது செலுத்தினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன், அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 23
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |