ஓரெழுத்து சொற்கள் | Oreluthu Varthaigal in Tamil | One Letter Words in Tamil

Advertisement

Oreluthu Varthaigal in Tamil..!

வணக்கம் நண்பர்களே நமது தமிழ் மொழியில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. இந்த தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு! குறிப்பாக இதனை ஓரெழுத்து சொற்கள் என்று சொல்வார்கள். இத்தகைய ஓரெழுத்து சொற்களை பெரும்பாலும் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு அவர்களுடைய ஆசிரியர்கள்  வீட்டு படமாக எழுதி வர சொல்வார்கள். அப்பொழுது குழந்தைகளுக்கு சரி, பெற்றோர்களுக்கும் சரி திடீரென்று ஓரெழுத்து சொற்கள் நினைவிற்கு வராது. அப்படி பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு நாம் ஓரெழுதில் வரக்கூடிய சொற்கள் மற்றும் அதற்கு என்ன பொருள் என்பதை பற்றியும் பார்த்து படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஓரெழுத்து சொற்கள் 42 – One Letter Words in Tamil:

அ – எட்டு
ஆ – பசு
ஈ – கொடு, பறக்கும் பூச்சி
உ – சிவன்
ஊ – தசை, இறைச்சி
ஏ – அம்பு
ஐ – ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ – வினா, மதகு – நீர் தாங்கும் பலகை
கா – சோலை, காத்தல்
கூ – பூமி, கூவுதல்

Oreluthu Varthaigal in Tamil:

கை – கரம், உறுப்பு
கோ – அரசன், தலைவன், இறைவன்
சா – இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ – இகழ்ச்சி, திருமகள்
சே – எருது, அழிஞ்சில் மரம்
சை – செல்வம்
சோ – மதில், நகரம்
சௌ – சுமங்கலி
ஞா – பொருத்து
ஞை – இகழ்ச்சி
த – குபேரன்

Or Eluthu Sorkal in Tamil:

தா – கொடு, கேட்பது
தீ – நெருப்பு
து – கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ – வெண்மை, தூய்மை
தே – நாயகன், தெய்வம்
தை – மாதம்
நா – நாக்கு
நீ – நின்னை
நே – அன்பு, நேயம்
நை – வருந்து, நைதல்
நொ – நொண்டி, துன்பம்
நோ – நோவு, வருத்தம்
நௌ – மரக்கலம்

ஓரெழுத்து சொற்கள் 42:

பா – பாட்டு, நிழல், அழகு
பூ – மலர்
பே – மேகம், நுரை, அழகு
பை – பாம்புப் படம், பசுமை, உறை
போ – செல்
மா – மாமரம், பெரிய, விலங்கு
மீ – ஆகாயம், மேலே, உயரம்
மு – மூப்பு
மூ – மூன்று
மே – மேன்மை, மேல்
மை – அஞ்சனம், கண்மை, இருள்
மோ – முகர்தல், மோதல்
யா – அகலம், மரம்
வா – அழைத்தல்
வீ – பறவை, பூ, அழகு
வை – வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ – கௌவுதல், கொள்ளை அடித்தல்

க கா கி கீ வரிசை சொற்கள்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement