வீட்டு பத்திரம் அடமான கடன்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் வீட்டு பத்திரத்தை வைத்து நாம் கடன் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். நமக்கு அத்தியாவசிய பண தேவைக்காக வீட்டு பத்திரம், வீடு, நகை மற்றும் வீட்டு மனை இது போன்றவற்றை அடமானம் வைத்து பணத்தை பெறுவது வழக்கமான ஒன்று. அப்படி நாம் அடமானம் வைப்பதில் நமக்கு தெரியாத விஷயங்களும் இருக்கின்றன. அது என்னென்ன விஷயங்கள் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் பாருங்கள்⇒ EMI கடன் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?
கடன் வாங்குதல்:
நீங்கள் உங்களுடைய சொத்துக்களை வைத்து கடன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது முன் கூட்டியே கடன் வாங்குவதற்கான சரியான நேரத்தை திட்டமிட வேண்டும். ஏனென்றால் கடன் கொடுப்பதற்கு முன் உங்களின் முழு விவரங்களையும் சரிபார்த்து அதன் பிறகு கடன் கொடுப்பதற்கு வங்கியில் கால அவகாசம் ஆகும்.
அதுபோல நீங்கள் எப்போதும் கடன் வாங்கும் முன்பே உங்களுடைய சொத்துக்கான மதிப்பை கண்டறிந்து அதற்கான ஆவணங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும்.
கடன் வாங்கும் தொகை:
உங்களுடைய பத்திரத்தை வைத்து கடன் வாங்கும் போது உங்களுக்கு தேவையான தொகையினை மட்டுமே கடனாக வாங்குவது நல்லது. ஏனென்றால் நீங்கள் வாங்கிய கடனை சரியாக செலுத்த முடியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட்டு சொத்துக்கள் கைப்பற்றப்படும்.
வட்டி விகிதம் நிர்ணயம்:
உங்களுடைய சொத்துக்களை வங்கி மற்றும் நிதிநிறுவனங்களில் வைத்து கடன் வாங்கும் போது அதனுடைய வட்டி விகிதம் 9 முதல் 18 சதவிகிதம் வரை மாறுபடும். அதனால் கடன் வாங்குவதற்கு முன்பே உங்கள் கடனுக்கான சரியான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்து கொள்வது நல்லது.
கடனை திருப்பி செலுத்த தவணை:
நீங்கள் கடனை செலுத்துவதற்கான தவணை முறையினை சரியாக தேர்வு செய்ய வேண்டும். குறைந்த அளவு தவணை முறையில் பணத்தை செலுத்தினால் வட்டி குறைவாக இருக்கும். அதனால் அதிக அளவு தவணை முறையினை தேர்வு செய்யாதீர்கள்.
வீட்டு பத்திரம் கடன்:
நீங்கள் உங்களுடைய பத்திரத்தை அடகு வைப்பதற்கான படிவங்களை நன்றாக படித்து அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அதில் கையெழுத்து போட வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |