EMI கடன் செலுத்தாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

Advertisement

சொந்த வீடு கட்ட

வணக்கம் நண்பர்களே..! இன்றைய காலகட்டத்தில் சொந்த வீடு கட்டுவதோ அல்லது வீடு வாங்குவதோ அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் வீடு வாங்கும் கனவு எல்லோருக்கும் உண்டு. அப்படி வீடு வாங்கலாம் என்று முடிவு செய்தாலும் கடன் வாங்காமல் இருப்போரின் எண்ணிக்கை மிக குறைவு. வங்கிகளில் சொந்த வீடு வாங்க கடன் கிடைத்தாலும் 15-30 வருடம் நீண்டகால கடனாக இருக்கிறது. எல்லா நேரத்திலும் EMI செலுத்தும் நேரத்தில் பணம் இருக்கும் என்று சொல்லமுடியாது. கஷ்டம் என்பது எல்லோருக்கும் வரும் அதனால் வாழ்வில் ஏற்றம் இரக்கம் இருக்கும். அதனால் சரியான நேரத்திற்கு EMI தொகை செலுத்த முடியாமல் போகலாம். அப்படி EMI கடன் செலுத்தாவிட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி இன்றைய பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

ஒரு SMS அனுப்புனா? BANK உங்கள் கையில் இருக்கும்..! SMS பண்ணிட்டிங்களா

What Happens if EMI is Not paid in Tamil:

emi not paid in tamil

வீடு கட்ட வங்கியில் இருந்து வாங்கிய தொகையை மாதந்தோறும் EMI பணத்தை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை பற்றி விரிவாக படித்த தெரிந்துகொள்ளலாம்.

EMI Due Message in Tamil:

நீங்கள் வாங்கிய கடனை EMI-யில் முதல் தவணை செலுத்தாவிட்டால் வங்கி அல்லது நிதி நிறுவனங்கலில் இருந்து எஸ்எம்எஸ், EMI, மொபைல் அழைப்புகள் மூலம் உங்களுக்கு நினைவூட்டுவார்கள். அது மட்டுமில்லாமல் நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தாத காரணத்தினால் கூடுதல் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும்.

EMI Fine in Tamil:

emi fine in tamil

உங்களுடைய EMI தொகையினை தாமதமாக செலுத்தினால் அதற்கு தனியாக அபராத கட்டணம் விதிக்கப்படும். இந்த அபராத ஓவர்டியூவில் 1 முதல் 2 என்ற சதவீத தொகையாக இருக்கும். இதனை நீங்கள் செலுத்தும் EMI தொகையுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.

வாராக்கடன் வசூல்:

இரண்டாவது முறையும் நீங்கள் EMI செலுத்தவில்லை என்றால் வங்கியில் இருந்து உங்களுக்கு ஒரு மெசேஜ் அல்லது கடிதம் வரலாம். அதன் பிறகு அந்த அறிவிப்பில் பணத்தை விரைவாக செலுத்த சொல்லி எச்சரிக்கை வரலாம்.

3-வது முறையும் EMI செலுத்தவில்லை என்றால் வங்கி தரப்பிலிருந்து வீட்டு கடனை வாராக்கடனாக (NA) அறிவித்துவிடும்.

SARFAESI Act 2002 in Tamil:

அதன் பிறகு EMI தொகை செலுத்தாதவர்கள் மீது வங்கி தரப்பில் இருந்து SARFAESI சட்டம் 2002 கீழ் நடவடிக்கை எடுக்க தொடங்கும். பணத்தை வசூலிக்க 60 நாட்கள் வங்கியில் இருந்து கால அவகாசம் கொடுத்து  நோட்டீஸ் அனுப்பப்படும்.

சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும்:

sothukal kaipatrapadum in tamil

கடைசியாக 60 நாட்கள் அவகாசம் கொடுத்த பிறகும் பணத்தை செலுத்தவில்லை என்றால் வங்கியில் ஒரே ஒரு நோட்டீஸ் மட்டும் கொடுத்துவிட்டு SARFAESI 2002 சட்டத்தின் கீழ் நீதிமன்றத்துக்கு செல்லாமலே சொத்துக்கள் கைப்பற்றப்படும். இதில்  அவருடைய credit score பாதிக்கப்படும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement