முகம் இயற்கை பொழிவுடன் இருக்க
ஹாய் பிரெண்ட்ஸ் இன்று நாம் வீட்டில் இருந்து செய்ய கூடிய சில எளிமையான அழகு குறிப்பு டிப்ஸினை பார்க்கலாம். அதாவது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை எப்படி பராமரிக்கலாம்.
முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை வீட்டு வைத்தியங்களை பின் பற்றினால் போதும். நாம் எளிமையான முறையில் இந்த மருக்களை நீக்கிவிட முடியும். இவை சரும அழகையே கெடுத்துவிடும். இந்த பிரச்சனைகளுக்கு உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே எளியமுறையில் சரிசெய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் பொலிவு பெற:
கற்றாழை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி புதிய ஆரோக்கியமான செல்கள் உருவாகும்.
இந்த புதிய செல்கள் சருமத்திற்கு அழகை தரும்.
தேவையான பொருட்கள்:
- கற்றாழை
- சர்க்கரை
- மஞ்சள் தூள்
தயாரிக்கும் முறை:
- முதலில் ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை பிரித்து தனியாக எடுத்து கொள்ள வேண்டும்.
- பின் அதனுடன் சிறிதளவு சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக ஜெல்லை கலந்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
- பின் அந்த ஜெல்லை உங்கள் முகத்தில் தடவி மஜாஜ் செய்ய வேண்டும். பிறகு 20 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
- இப்படி செய்து வருவதால் உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கருமை, கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையம் போன்றவை நீங்கி விடும். அதுபோல முகத்தில் வறட்சி நீங்கி பருக்கள் வராமல் தடுக்கும்.
கற்றாழை பயன்படுத்துவதால் உங்களின் சருமம் ஆரோக்கியமாக காணப்படும்.
முக பொலிவுக்கு நீங்கள் தினமும் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 அவுன்ஸ் தண்ணீர் குடிப்பதால் உங்களின் சருமம் மிருதுவாகவும் பளபளனும் மாறும்.
chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க….
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |