chemical கலந்த ஹேர் டை வேண்டாங்க வீட்டில தயாரித்த இயற்கை ஹேர் டை try பண்ணி பாருங்க….

Advertisement

இயற்கை ஹேர் டை 

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கின்ற பிரச்சனையில் நரைமுடி பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. 20 மற்றும் 30 வயதில் தோன்றும் நரை முடி உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். 40 வயதிற்கு மேல் நரை முடி வருவது இயற்கையை, ஆனாலும் குறுகிய காலத்தில் அதிக நரை முடி தோன்றினால் ஊட்டச்சத்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இப்படி ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நரைமுடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மாதிரி பயன்படுத்தும் போது நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் கண்களில் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு முதல் புள்ளியாக இருக்கும். அதனால் கடையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த டைக்கு பதிலாக நீங்களே வீட்டில் இயற்கை முறையில் டை தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் நிரந்தரமாக இயற்கையான முறையில் நரைமுடியை கருப்பாக மாற்றலாம். வாங்க இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வீட்டிலே தயாரித்த ஹேர் டை பயன்படுத்தி முடியை கருமையாக்க:

கற்றாழையில் ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் முடியின் வேர் பகுதியிலுருந்து வளருவதற்கு உதவுகிறது. வைட்டமின் பி மற்றும் கனிமச்சத்து அதிகமாக இருப்பதால் முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடிக்கு கண்டிஷனராகவும், மாய்ஸ்சரைசராகவும் வேலை செய்கிறது. கருவேப்பிலையில் முடிக்கு தேவையான புரோட்டீன் மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் முடி உதிர்வை தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. மேலும் நரை முடி வருவதை தடுத்து கருமையாக வளர உதவுகிறது. கரிசலாங்கண்ணி பொடியில் இயற்கையாகவே நரை முடியை கருப்பாக மற்றும் தன்மை உடையது.

hair jel செய்வது எப்படி?

முதலில் கற்றாழையின் தோலை நீக்கி ஜெல்லை மட்டும் 1/2 கப் எடுத்து மிக்சி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

நரை முடியை கருப்பாக மாற்ற

மருதாணி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலைகளை நன்றாக காயவைத்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

பிறகு, அடுப்பில் இரும்பு கடாய் வைத்து மருதாணி பொடி, கரிசலாங்கண்ணி பொடி சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை அந்த பொடியோடு சேர்த்து கலந்து விடவும். அது இரவு முழுவதும் அந்த ஜெல்லை குளிர விடவும்.

karumaiyana midikku

அடுத்த நாள் காலையில் நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஜெல்லை தலையில் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஜெல்லை உங்கள் தலையில் அப்ளை செய்துவிட்டு 3 மணி நேரத்திற்கு பிறகு தலையை அலச வேண்டும்.

இந்த ஜெல்லை 15 நாட்களுக்கு ஒரு முறை அப்ளை செய்தால் 5 முறையிலே நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஒரு முறை ட்ரை பண்ணுங்க நண்பர்களே.!

சட்டுனு உங்க வெள்ள முடி கருப்பாக கறிவேப்பிலை மட்டும் போதுங்க…

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement