Eye Health Care Tips in Tamil
உடல் உறுப்புகளில் கண்கள் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். டிஜிட்டல் யுகத்தில் அனைத்து பயன்பாட்டிற்கும் கண்கள் என்பது அவசியமான ஒன்றாகும். குழந்தைகளுக்கு கூட மொபைல் காட்டி தான் சாப்பாடு ஊட்டுகிறார்கள். இது போன்ற காரணங்களால் வயது வரம்பின்றி கண்கள் பிரச்சனை ஏற்படுத் தொடங்கிவிட்டது. இரவும் பகலும், ஒளி உமிழும் திரைகளைப் பார்த்து கண்களை சோர்வடையச் செய்கிறோம்.
பொழுது போக்கு என்றாலே திரை அணுகல் தான். ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, லேப்டாப், டேப்லெட் போன்றவைகளில் தான் பெரும்பாலானோர் நேரத்தை செலவிடுகிறார்கள். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் நிலை மிக பரிதாபமான ஒன்று. அலுவலகத்தை விட வீட்டில் லேப்டாப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவது கண்களின் அழுத்தத்தை அதிகரிக்கிறது.
ஆக நமது கண்களை நாம் தான் ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும். நமது கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 வழிகளை பற்றி தான் இங்கு நாம் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க அவைகளை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!
1 கண்கள் ஆரோக்கியத்திற்கு பொன்னாங்கண்ணி கீரை மிகவும் பயனளிக்கிறது. ஆக இந்த பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
2 தினமும் ஒரு கேரட்டை சமைத்தோ அல்லது பச்சையாகவோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவ்வாறு தினமும் கேரட் சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கியமான கண்களை பெற முடியும்.
3 ஒரு நாளுக்கு குறைந்தது ஐந்து நிமிடமாவது உங்களுடைய மூக்கின் நுனி பகுதியை பார்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பார்வை திறன் அதிகரிக்கும்.
4 ஒரு நாளுக்கு ஒரு முறையாவது உங்களுடைய கண்களை சுழற்றுங்கள், அதாவது உங்கள் கருவிழியை ஒரு பால் போன்று எல்லா பக்கமும் சுழற்ற வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
5 உங்கள் புருவத்திற்கு இடையில் இருக்கும் பகுதியை பார்க்க முயற்சி செய்யுங்கள், இந்த பயிற்சி செய்வதற்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும், இருந்தாலும் முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
6 காலை எழுந்தவுடன் சுத்தமான நீரில் உங்கள் கண்களை கழுவவும், அதாவது ஒரு அகலமான பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி உங்கள் முகத்தை அந்த தண்ணீரின் உள்ளே விடவும் பிறகு கண்களை திறந்து திறந்து மூடவும். இவ்வாறு செய்வதினால் உங்கள் கண்கள் சுத்தமாகவும், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
7 நீங்கள் கண்ணாடி போட்டுக்கொள்ளும் நபர்கள் என்றால் அந்த கண்ணடியை எப்பொழுதும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டாம். கண்ணாடியை கழட்டிவிட்டு, சிறிது நேரம் கண்ணாடி போடலாம் அனைத்தையும் பார்க்க, படிக்க பழகவும்.
8 ஒரே இடத்தை கண்களை சிமிட்டும் அதிக நேரம் பார்ப்பது தவிர்க்கவும். அடிக்கடி கண்களை சிமிட்ட வேண்டும். இவ்வாறு செய்வதினால் உங்கள் கண்கள் புத்துணர்ச்சி பெரும்.
9 அதிக நேரம் ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, லேப்டாப், டேப்லெட், சிஸ்டம் பார்ப்பவர்கள் குறைந்தது 8 மணி நேரமாவது கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
10 தினமும் 10 நிமிடமாவது ஏதாவது ஒரு புத்தகத்தை படியுங்கள், இதனால் கண்கள் ஒரு விஷயத்தை கவனமாக பார்பதினால், உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் கண்களின் நல்லதுக்கு இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!!
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Health tips tamil |