Home Remedy for Face Wrinkle Lines in Tamil
நாம் அனைவருக்குமே நம்மை அழகாக பராமரித்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான நேரம் தான் நமக்கு கிடைக்காது. அதிலும் இன்றைய சூழலில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாகவும் நமது பலவகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றது. அப்படி ஏற்படும் பலவகையான பாதிப்புக்களில் ஒன்று தான் நமது முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள்.
இவை பொதுவாக வயது மூத்தவர்களுக்கு தான் ஏற்படும். ஆனால் தற்பொழுது சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட ஏற்படுகிறது. அதனை போக்குவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் சரியான பலனை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் நமது முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Face Wrinkle Lines Natural Remedies in Tamil:
பொதுவாக நாம் அனைவருக்குமே இளமையாக இருப்பது என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இளமையிலேயே முகத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தை அளிக்கும். அதனை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
- நல்லெண்ணெய் – 100 மி.லி
- சந்தன பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- குங்கும பூ – 1 சிட்டிகை
- வைட்டமின் E கேப்சூல் – 1
இதை மட்டும் ஒரு டீஸ்பூன் தடவுங்க போதும் உங்க முகம் நிலவு போல் ஜொலிக்கும்
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 100 மி.லி நல்லெண்ணெய்யை ஊற்றி நன்கு சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சந்தன பொடி மற்றும் 1 சிட்டிகை குங்கும பூ ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடனே 1 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
இதனை தினமும் உங்களின் முகத்தில் தடவி 10 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு மசாஜி செய்து முகத்தை கழுவி கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் மறைந்து நீங்கள் இளமையுடன் காணப்படுவீர்கள்.
100 வயது ஆனாலும் வெள்ளை முடியை கருமையாக வைத்துக் கொள்ளும் கற்றாழை ஹேர் டை
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |