வளராமல் இருக்கும் புருவத்தை அடர்த்தியாக வளர வைக்க வேண்டுமா..! அப்போ இதை மட்டும் Follow பண்ணுங்க..!

Advertisement

Grow Eyebrows Thicker Naturally in Tamil

அனைவருக்கும் முக அழகு என்பது மிகவும் முக்கியம். அதிலும் பெண்களுக்கு முக அழகு என்பது மிக முக்கியமான ஒன்று. பெண்களின் அழகை மேம்ப்படுத்தி காட்டுவது அவர்களின் கண்கள் தான். அப்படி இருக்கும் வண்ணம் சிலருக்கு கண் புருவத்தில்  முடி வளராமல் இருக்கும். எனவே புருவத்தை வளர்ப்பதற்கு அவர்கள் பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி இருப்பார்கள். அப்படி இல்லையென்றால், Eyebrow பென்சில் வைத்து பட்டையாக புருவத்தை வடிவமைத்து கொள்வார்கள். எனவே இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு இயற்கையாகவே புருவத்தை அடர்த்தியாக வளர வைப்பது எப்படி என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே புருவத்தில் முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Tips For Eyebrows Growth in Tamil:

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளன. எனவே ஒரு சில துளிகள் தேங்காய் எண்ணெயை புருவத்தில் தடவி கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சில மணி நேரம் ஊறவைத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள்.

7 நாட்களில் கண் இமை முடி அடர்த்தியாக வளரணுமா..  அப்போ இதை மட்டும் செய்தால் போதும்

விளக்கெண்ணெய்:

 how to grow eyebrows thicker naturally at home in tamil

விளக்கெண்ணெயில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே இரவு நேரத்தில் உறங்கும் முன், காட்டன் துணியில் சிறிதளவு விளக்கெண்ணெயை நனைத்து புருவங்களில் தடவி கொள்ளுங்கள். பிறகு காலையில் தண்ணீர் கொண்டு புருவங்களை கழுவி விடலாம்.

வெங்காயச் சாறு:

 how to grow eyebrows faster and thicker naturally at home in tamil

வெங்காயச் சாற்றில் கந்தகம் நிறைந்துள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுவதாக கருதப்படுகிறது. எனவே புருவங்கள் அடர்த்தியாக வளர வெங்காயச் சாற்றில் ஒரு காட்டன் துணியை நனைத்து புருவங்களில் தடவி கொள்ளுங்கள். இதனை 10 அல்லது 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி புருவத்தை கழுவி கொள்ளுங்கள்.

கற்றாழை: 

 how to grow eyebrows longer and thicker naturally at home in tamil

கற்றாழை சருமத்திற்கு மென்மையையும் பொலிவையும் தருவதோடு முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. எனவே கற்றாழை ஜெல்லை உங்கள் புருவங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து புருவத்தை வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு கழுவி விடுங்கள்.

வெந்தயம்:

வெந்தயம்

வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிகோடினிக் முடி வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. எனவே முதல் நாள் இரவே ஒரு தேக்கரண்டி அளவிற்கு வெந்தயத்தை ஊறவைத்து கொள்ளுங்கள். இதனை மறுநாள் காலையில் எடுத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இப்பேஸ்டினை புருவங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

கேரளா பெண்களின் ரகசியம் இது தானா.. செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்க முடி வளர்ச்சியை நிறுத்தவே முடியாது..

முட்டையின் மஞ்சள் கரு:

 tips for eyebrows growth in tamil

முட்டையின் மஞ்சள் கருவில் முடி வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் மற்றும்  பயோட்டின் நிறைந்துள்ளது. எனவே முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனை புருவங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு குளிர்ந்த நீரை பயன்படுத்தி புருவத்தை கழுவி விடுங்கள்.

மசாஜ்:

 புருவத்தில் முடி வளர

புருவங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம் முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. எனவே இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. தினமும் சில நிமிடங்கள் புருவங்களுக்கு மசாஜ் செய்வது மிகவும் நல்லது.

மேற்கூறியுள்ள இயற்கை குறிப்புகளில் உங்களுக்கு விருப்பமான முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement