Kerala Style Hair Growth Tips
ஹலோ பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் அதிக பெண்கள் சொல்வது என்னவென்றால் கேரளா பெண்கள் அழகிலும் சரி முடியின் வளர்ச்சியிலும் சரி முதலிடத்திலேயே இருக்கிறார்கள். அப்படி முக அழகிற்கும் முடி வளர்ச்சிக்கும் அவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று நம் அனைவருக்குமே கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கெல்லாம் பதில் கூறும் விதமாக இந்த பதிவில் கேரளா பெண்கள் முடி வளர்ச்சியின் ரகசியத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Kerala Style Hair Growth Tips in Tamil:

- செம்பருத்தி பூ – 6
- அரிசி – 4 ஸ்பூன்
- செம்பருத்தி இலை – 4
முதலில் முடியின் வளர்ச்சிக்கு நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் செம்பருத்தி பூ. இதை 6 அல்லது உங்கள் முடிக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். இதில் இருக்கும் சத்துக்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர செய்கிறது. அதுபோல தான் செம்பருத்தி இலையும், இது ஒரு இயற்கையான ஷாம்பு என்றே சொல்லலாம்.
| Summer -லும் உங்கள் முகம் பொலிவுடன் இருக்க இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க |
அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூவை நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். அதேப்போல அரிசியையும் நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.
பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்:

அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 2 டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும். பின் அதில் நாம் கழுவி வைத்துள்ள அரிசியை போட வேண்டும். அடுத்து செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூவை போட்டு கொள்ளவும்.
| தலை முடி தரையில் கிடைக்கும் அளவிற்கு முடி வளர தேங்காய் எண்ணெயில் இதை மட்டும் சேர்த்து தடவுங்க |
இதை நன்றாக கலந்து விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து நிறம் மாறியதும் அதை அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின் அதை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:

இந்த நீரை குளிக்க செல்லும் முன் முன் தலை முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனி வரை நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 30 நிமிடம் வரை வைத்திருந்து பின் தலையை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு அலசி கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் உங்கள் முடியின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
| 2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க |
| இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |














