1 மணி நேரத்தில் வெள்ளை முடியை கருமையாக மாற்றும் ஹேர் டை | How to Make Hair Black Naturally Permanently
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானவர்களுக்கு நரைமுடி பிரச்சனை என்பது இருக்கிறது.. இந்த பிரச்சனை சரி ஆக பலர் கடைகளில் விற்பனை செய்யப்படும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி அதனை பயன்படுத்துகின்றன.. இதனால் பலவிதமான பின்விளைவுகளையும் சந்திக்கின்றன.
ஆக நரைமுடி பிரச்சனைக்கு செயற்கை பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில்,இயற்கை பொருட்களை பயன்படுத்துவது தான் மிகவும் சிறந்து. அந்த வகையில் இன்று நாம் இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்யும் முறை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது எப்படி என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
- காபி தூள் – இரண்டு ஸ்பூன்
- மருதாணி பொடி – இரண்டு ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி – இரண்டு ஸ்பூன்
- அவுரி பொடி – மூன்று ஸ்பூன்
- தண்ணீர் – ஒரு டம்ளர்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொத்து கொத்தாக நரை முடி இருந்தாலும் அதை நிரந்தரமாக மாற்ற இயற்கை முறையில் ஹேர் டை இதோ..!
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி டீத்தூள் இரண்டு ஸ்பூன் மற்றும் காபி தூள் இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீரானது அரை டம்ளர் அளவு வரும் வரை கொதிக்க வைத்துக்கொள்ளுங்கள். பிறகு அடுப்பை அனைத்துவிடலாம்
பின் ஒரு இரும்பு வாணலி அல்லது கடாயை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மருதாணி பொடி, நெல்லிக்காய் பொடி மற்றும் அவுரி பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
பிறகு அதில் நாம் கொதிகவித்துள்ள டீத்தூள் மற்றும் காபி தூள் கலவையை வடிகட்டி அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
நன்றாக பேஸ்டு போல் கலந்த பிறகு நன்றாக மூடி போட்டு ஒரு மணி நேரம் அதிலேயே ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அதனை திறந்து பார்த்தால் அவற்றில் கலர் கொஞ்சம் மாறியிருக்கும்.
ஆக அதனை மீண்டு ஒரு முறை கலந்துவிட்டு தலையில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும், குறிப்பாக தலையில் எங்கெல்லாம் வெள்ளை முடி இருக்கின்றதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
அப்ளை செய்த பிறகு ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும், ஒரு மணி நேரம் கழித்து தலை அலசலாம். தலையில் அப்ளை செய்யும் போது தலையில் நீங்கள் எக்காரணம் கொண்டும் எண்ணெய் தடவி இருக்க கூடாது. ஆக முதல் நாளே தலைக்கு ஷாம்பு போட்டு குளித்துவிட்டு மறுநாள் இந்த முறையை செய்து பாருங்கள் கண்டிப்பாக ஒரு மாற்றம் உங்களுக்கு தெரியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எவ்வளவு வெள்ளை முடி இருந்தாலும் இந்த ஹேர் டை மட்டும் போதும் மொத்த வெள்ளை முடியையும் கருப்பாக மாற்றி விடும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |