பெண்கள் முடி அடர்த்தியாக வளர – How to Make Your Hair Grow Super Fast Naturally in Tamil
பெண்களுக்கு அழகு சேர்ப்பது என்றால் அது தலை முடி தான். இந்த தலை முடியை அதிகம் வளர்ப்பதற்காக நிறைய செயற்கையாக கிடைக்கும் பொருட்களை தலை முடிக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் எப்போதும் நாம் உடலுக்கும் சரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுக்கும் சரி செயற்கையாக செய்யபட்ட பொருட்களை சேர்த்துகொள்வதால் நமக்கு நிறைய பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் இயற்கை பொருள்களுக்கு எப்போதும் மவுஸ் குறையாது. அதில் இருக்கும் சத்துகள் அனைத்தும் நமக்கு நிறைய சத்துக்களை கொடுக்கும். ஆகவே எப்போதும் தலை முடி வளர இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது. சரி உங்கள் முடியை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர வைக்க இன்று சூப்பரான அருமையான ஹேர் பேக் பற்றி பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Your Hair Grow Super Fast Naturally in Tamil:
முதலில் சாதம் வடித்த தண்ணீர் 1 டம்ளர் அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் 3 ஸ்பூன் அளவு வெந்தயத்தை அந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
இந்த வெந்தயத்தின் கூடவே பாசி பயிறு சேர்த்து அதையும் ஊறவைக்கவும். இதனை 1 நாள் இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் பார்த்தால் அந்த 3 பொருளும் ஒன்றோடு ஒன்றாக கலந்து ஊறி இருக்கும். அது அப்படியே வைத்துக் கொள்ளவும்.
உங்க முடியின் வளர்ச்சி உங்களையே வியக்க வைக்கும் அதுக்கு இந்த பொருள் மட்டும் போதும்
அடுத்து 5 கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு கழுவி அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து நாம் ஊறவைத்துள்ள பொருட்களை அப்படியே ஊறவிட்டு நன்கு மிக்சி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வடிகட்டியோ அல்லது துணியோ வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் ஹேர் பேக் ரெடி. இனி எதையும் பார்க்காமல் உடனே ஹேர் பேக்கை தலை முடியில் அப்ளை செய்யவும் அவ்வளவு தான். அதன் பின்பு அப்ளை செய்து 20 நிமிடம் அல்லது 30 நிமிடம் கழித்து தலையை நன்கு குளிக்கவும்.
முடி கத்த கத்தையாக கொட்டுகிறதா அனைத்தும் சரியாக இந்த ஒரு இயற்கையான கிரீம் போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |