Dark Skin Spots Removal Home Remedy in Tamil | கரும்புள்ளி நீங்க
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை எப்படி இயற்கையான முறையில் அகற்றுவது என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் பலரும் சந்திக்கும் சரும பிரச்சனைகளில் கரும்புள்ளியும் ஒன்று. எனவே, இதனை எப்படி வீட்டில் இருந்தே சரிசெய்வது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
முகத்தில் பருக்கள் வந்து மறைந்த பிறகு அந்த இடத்தில் உள்ள தழும்புகள் மாறாமல் அப்படியே இருந்து பின்பு கரும்புள்ளிகளாக தோன்றிவிடும். முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் வந்தாலே முக அழகே கெட்டு விடும். அனைவருமே தங்களை அழகாக வைத்துக்கொள்ள தான் விரும்புவார்கள். எனவே இதற்காக பலவகையான க்ரீம்களை பயன்படுத்தி முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவார்கள். எனவே அந்த வகையில் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது எப்படி என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
How To Remove Dark Skin Spots on Face in Tamil:
தேவையான பொருட்கள்:
- பச்சை பயறு- 4 ஸ்பூன்
- காய்ச்சாத பால்- 3 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
- உப்பு- 1 பின்ச்
ஸ்டேப்- 1
முதலில் பச்சை பயிரினை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
உங்க முகத்தில் பருக்கள் அதிக அளவு உள்ளதா.. அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்க போதும்
ஸ்டேப்- 2
பிறகு, மறுநாள் காலையில் அதனை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்து, இப்பேஸ்ட்டில் காய்ச்சாத பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
பிறகு, இதில் சிறிதளவு அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது கரும்புள்ளியை நீக்குவதற்கான பேஸ்பேக் தயார்.!
அப்ளை செய்யும் முறை:
முதலில் முகத்தை தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி விடுங்கள்.
பிறகு, தயார் செய்து வைத்துள்ள பேஸ்பேக்கினை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இப்பேஸ் பேக்கினை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் மட்டுமில்லாமல் முகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கூட அப்ளை செய்து கொள்ளலாம்.
முகத்தில் நன்றாக அப்ளை செய்த பிறகு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீர் கொண்டு நன்றாக கழுவி விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறிவிடும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |