முகத்தை விட கை ரொம்ப கருப்பா இருக்கா..! அதை எளிதில் வெண்மையாக்க இதோ சில இயற்கையான வழிகள்..!

Advertisement

Get Rid of Dark Spots on Hands Naturally in Tamil

வணக்கம் நண்பர்களே..! பெரும்பாலும் பலபேருக்கு முகத்தின் நிறத்தை விட கையின் நிறம் ரொம்ப கருப்பாக இருக்கும். வெயிலின் காரணத்தினால் கூட கை அதிக கருப்பாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் நாம் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமது கைகளுக்கு கொடுப்பதில்லை. முகத்திற்கு பல விதமான பொருட்கள் பயன்படுத்தி முகத்தை வெண்மையாகவும் பளபளப்பாகாவும் வைத்திருக்கிறோம். ஆனால் கைகளுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகம் மட்டும் வெண்மையாக இருந்து கைகள் கருப்பாக இருந்தால் அது நன்றாக இருக்காது. எனவே வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி கருப்பான கைகளை வெள்ளையாக்குவது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How To Get Rid of Dark Spots on Hands Naturally in Tamil:

வெள்ளரிக்காய்:

 கைகளில் உள்ள கருமையை போக்க

வெள்ளரியை அரைத்து அதில் உள்ள சாற்றினை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் 3 ஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

இப்போது இதனை கைகளில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு பிறகு தண்ணீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கைகளில் வெயிலினால் ஏற்பட்ட கருமை நீங்கி கைகள் பளபளப்பாகும்.

உருளைக்கிழங்கு:

 how to get rid of dark spots on hands in tamil

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள். இவை இரண்டின் தோலை நீக்கி விட்டு பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது இதனை கைகளில் அப்ளை செய்து நன்றாக காய்ந்த பிறகு கழுவி விடலாம். இவ்வாறு நீங்கள், வாரத்திற்கு ஒருமுறை என நான்கு வாரங்களுக்கு செய்து வந்தால் கையில் உள்ள கருமை நிறம் நீங்கி வெண்மையாகுவதை பார்க்கலாம்.

ஒரே வாரத்தில் கைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா.

 பாதாம் பருப்பு:

பாதாம்பருப்பு

பாதாம் பருப்புகளை ஊறவைத்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது இதனை உங்கள் கைகளில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

சர்க்கரை:

 how to remove dark spots on hands at home in tamil

உங்கள் கைக்கு தேவையான அளவில் சர்க்கரையை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்பொது இதனை கைகளில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்து விடுங்கள்.

மேற்கூறியுள்ள முறைகளில் உங்களுக்கு விருப்பமான செய்முறையை நீங்கள் பயன்படுத்தலாம். இம்முறைகள் எல்லாம் உங்கள் கைகளை வெண்மையாக்க உதவும் இயற்கை குறிப்புகள் ஆகும். 

உங்க முடி வளர்ந்து கொண்டே போவதை நீங்கள் காண வேண்டுமா..  அப்போ முருங்கை கீரையை இப்படி பயன்படுத்துங்க..

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement