உங்க முடி வளர்ந்து கொண்டே போவதை நீங்கள் காண வேண்டுமா..? அப்போ முருங்கை கீரையை இப்படி பயன்படுத்துங்க..!

Advertisement

Fast Long Hair Growth For Natural Oil

வணக்கம் நண்பர்களே..! பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல முடி நீளமாக வளர வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. பொதுவாக முடி உதிர்வு பிரச்சனைகள் ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்கும் வருவது இயற்கை தான். அதுபோல நாமும் அந்த பிரச்சனைகளை இயற்கையான முறையில் தான் சரி செய்ய வேண்டும். அந்த வகையில் இன்று முடியை நீளமாக வளர செய்யும் எண்ணெய் எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Fast Long Hair Growth For Natural Oil in Tamil: 

How to make moringa oil for hair growth

பொதுவாக முடியின் வளர்ச்சிக்கு நாம் எடுத்து கொள்ளும் பொருள் தான் முருங்கை கீரை. முருங்கை கீரை பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. முருங்கை கீரையில் இருக்கும் சத்துக்களை சொல்லிக்கொண்டே போகலாம். முருங்கை கீரை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. ஆனால் இது எப்படி முடிக்கு உதவும் என்று யோசிப்பீர்கள்.

ஆனால் முருங்கை கீரை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நாம் வாரத்திற்கு 2 முறை முருங்கை கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனை நின்று முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

முன் நெற்றியில் முடி குறைந்து விட்டதா.. அப்போ இந்த எண்ணெயை தடவுங்க மூன்றே நாட்களில் முடி வளர ஆரம்பித்துவிடும்.. 

சரி வாங்க நண்பர்களே முருங்கை கீரை எண்ணெய் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முடி வளர்ச்சிக்கு முருங்கை கீரை எண்ணெய்:

முடி வளர்ச்சிக்கு முருங்கை கீரை எண்ணெய்

முதலில் 1 கைப்பிடி அளவிற்கு முருங்கை கீரை எடுத்து கொள்ளவும். பின் அதை சுத்தமாக கழுவி ஈரப்பதம் இல்லாமல் காயவைத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் 100 ml அளவிற்கு தேங்காய் எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். பின் நாம் எடுத்து வைத்துள்ள முருங்கை கீரையை எண்ணெயில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

கேரளா பெண்களின் ரகசிய எண்ணெய்.. இதை மட்டும் தடவி பாருங்க போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துக்கிட்டே போகும்

அடுத்து நாம் செய்யும் முறை தான் Double Boiling Method. இது என்ன என்று நமக்கு தெரியும். இருந்தாலும் சொல்கிறேன். முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின் தண்ணீர் சூடானதும் அதில் இன்னொரு பாத்திரத்தில் நாம் கலந்து வைத்துள்ள எண்ணெய் மற்றும் முருங்கை கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பின் எண்ணெய் கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். அவ்வளவு தான். இந்த எண்ணெயை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை எப்பொழுதும் தடவுவது போல தடவி வந்தால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

நமக்கு எப்போ இவ்ளோ முடி வளர்ந்திச்சின்னு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க.. அதற்கு இந்த எண்ணெயை தடவுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement