இந்த ஒரு பொருள் மட்டும் போதும் அனைத்து வெள்ளை முடியும் நொடியில் கருமையாக்கும் நிரந்தரமாகவும்

Advertisement

கற்றாழை ஹேர் டை செய்முறை | Katralai Hair Dye

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கின்ற பிரச்சனையில் நரைமுடி பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. 20 மற்றும் 30 வயதில் தோன்றும் நரை முடி உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கலாம். 40 வயதிற்கு மேல் நரை முடி வருவது இயர்கையானது தான், ஆனாலும் சிறு வயதில் அதிக நரை முடி தோன்றினால் ஊட்டச்சத்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இப்படி ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் நரைமுடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த டையை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

அதனை பயன்படுத்தும் போது நாளடைவில் உடல் ஆரோக்கியத்தில் குறிப்பாக கண்களில் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு முதல் புள்ளியாக இருக்கும். அதனால் கடையில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டைக்கு பதிலாக நீங்களே வீட்டில் இயற்கை முறையில் ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால் இயற்கையான முறையில் நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றலாம். வாங்க இயற்கையான முறையில் நரை முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:

  • கற்றாழை – ஒரு மடல்
  • நெல்லிக்காய் பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் பவுடர் – இரண்டு டேபிள் ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் வெள்ளை முடியை கருமையாக்கும் பூண்டு தோல் ஹேர் டை..!

கற்றாழை ஹேர் டை தயார் செய்யும் முறை – Katralai Hair Dye:

ஒரு கற்றாழையின் மடலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் உள்ள ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் வெந்தயம் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டியும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதாவது அதனுடைய நிறம் பிரவுன் நிறத்திற்கு மாறும் வரை வறுக்க வேண்டும்.

பிரவுன் நிறத்திற்கு மாறிய பிறகு அடுப்பை அணைத்து அதனை நன்றாக ஆறவிட்டு வேண்டும்.

வறுத்த பவுடர் நன்கு ஆரிய பிறகு அதில் அரைத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லை ஊற்றி கட்டிகள் இல்லாதவாறு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து நன்றாக கொதிக்கவிட வேண்டும். கொதிக்க வைக்கும் போது ஆகிவப்போது ஒரு கரண்டியை பயன்படுத்தி கிளறிக்கொண்டே இருக்கவும்.

இந்த கலவையானது ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து இரண்டு மணி நேரம் வரை அந்த இரும்பு கடையிலேயே ஊறவிடவும்.

இரண்டு மணி நேரம் கழித்து அதனை தலையில் எங்கெல்லாம் நரைமுடி உள்ளதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்யவும்.

பின் ஒரு மணி நேரம் கழித்து தலை அலசவும், வாரத்தில் ஒரு முறை இது போன்று செய்து வர கூடிய விரைவிலேயே நரை முடி முழுமையாக கருப்பாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வித்தியாசமான முறையில் பழங்களின் தோலை பயன்படுத்தி செய்த ஹேர் டை.. 100% ரிசல்ட் தரக்கூடியது..!

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்
Advertisement