பாட்டி வைத்தியம்
நமது சரும அழகை கெடுக்கும் முகப்பருக்கள். அந்த பருக்களினால் ஏற்படும் தழுப்புண்கள், கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறைய நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றலாம். முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிர செய்ய சில இயற்கை முறைகள் உள்ளது.
இயற்கை எப்போதும் நமது சருமத்திற்கு பாதுகாப்பை வழங்கும். அதுவும் வீட்டில் நாம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு இயற்கை முறையில் செய்யும் போது செலவுகளும் குறையும். இன்றைய பதிவில் எளிமையான முறையில் முகத்தில் மருக்களை நீக்கி பளிச் என்ற சருமத்தை பெற சில இயற்கை வழிமுறைகள் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
முகம் எப்போதும் புது பொலிவுடன் இருக்க:
மஞ்சள் முகத்தில் படியும் மாசுகளை எதிர்த்து போராடக்கூடியது. பால் உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியத்தை
- மைதா மாவு – 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- பால் – தேவையான அளவு
முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவிற்கு மைதா மாவு எடுத்து கொள்ளுங்கள் அதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு பால் சேர்த்து முகத்தில் பயன்படுத்துவது போல் பேஸ்ட் தயாரித்து கொள்ளவும்.
இப்போது நீங்கள் தயாரித்து வைத்துள்ள பேஸ் பேக்கை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் முகத்தினை குளிர்ந்த நீர் கொண்டு நன்றாக சுத்தம் செய்துவிட்டு பிறகு அந்த முகத்தின் அனைத்து பகுதிகளிலும் அப்ளை செய்துகொள்ளுங்கள்.
20 நிமிடங்கள் வரை நன்றாக உலர்ந்த பின்னர் வெதுவெதுப்பான நீரினால் முகத்தினை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் நீங்கி சருமம் எப்போதும் புது பொலிவுடன் இருக்கும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |