1kg Kulambu Milagai Thool Ingredients in Tamil | குழம்பு மிளகாய் தூள் அரைக்க தேவையான பொருட்கள் 1kg
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு கிலோ மிளகாய் தூள் அரைப்பது எப்படி ( 1kg kulambu milagai thool ingredients in tamil) என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வீட்டின் சமையலறையில் மிகவும் முக்கியமான பொருளாக இருப்பது மிளகாய் தூள். ஒரு உணவின் ருசியை தூண்டுவது மிளகாய் தூள் தான். காரம் இல்லையென்றால் அந்த உணவை சாப்பிடவே பிடிக்காது. அதாவது, உணவில் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, மற்றும் உவர்ப்பு ஆகியவை இருந்தால் மட்டுமே ருசியாக இருக்கும். அதில் கார்ப்பு (காரம் ) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
இதனால், நம் வீடுகளில் மிளகாய் வாங்கி வந்து காயவைத்து அதனுடன் சில பொருட்களை சேர்த்து அரைத்து மிளகாய் தூளை பயன்படுத்துவார்கள். சிலர் கடைகளில் விற்கும் பாக்கெட் மிளகாய் தூளினை பயன்படுத்துவார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் காய்ந்த மிளகாயினை 1 கிலோ, 2 கிலோ போன்று கிலோக்கணக்கில் வாங்கி வந்து அரைத்து மாதக்கணக்கில் சேமித்து வைத்து விடுவார்கள். அந்த வகையில், பெரும்பாலான வீடுகளில் 1 கிலோ மிளகாய் தூள் அரைப்பார்கள். ஆகையால், அவர்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு கிலோ மிளகாய் தூள் அரைக்க என்னென்ன பொருட்கள் எவ்வளவு அளவில் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு கிலோ குழம்பு மிளகாய் தூள் அரைப்பது எப்படி.?
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் – 25 கிராம்
- காய்ந்த சிவப்பு மிளகாய் – 1 கிலோ
- கொத்தமல்லி விதைகள் – 1/2 கிலோ
- மிளகு – 50 கிராம்
- சீரகம் – 200 கிராம்
- பெருஞ்சீரகம் – 100 கிராம்
- வெந்தயம் –25 கிராம்
- கடுகு – 50 கிராம்
- கடலை பருப்பு – 100 கிராம்
- துவரம் பருப்பு – 100 கிராம்
- கருப்பு உளுத்தம் பருப்பு – 10 கிராம்
- பச்சை அரிசி – 100 கிராம்
செய்முறை:
- முதலில், வர மிளகாய் மற்றும் மல்லி விதைகளை 2 மணிநேரம் வரை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
- நன்கு காய்ந்ததும், அதில் தேவையான அணைத்து பொருட்களையும் சேர்த்து மில்லில் கொடுத்து அரைத்து வர வேண்டும்.
- அரைத்து வந்ததும், அதனை ஒரு பெரிய அகலமான தட்டில் கொட்டி சிறிது நேரம் அதன் ஹீட் குறையும் வரை ஆற வைக்க வேண்டும்.
- அதன் பிறகு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் சேமித்து வைத்து மாதக்கணக்கில் பயன்படுத்தி வரலாம்.
ஒரு கிலோ மிளகாய் தூள் அரைப்பது எப்படி.?
பெரும்பாலான வீடுகளில் மிளகாய் தூள் தனியாகவும் மல்லி தூள் தனியாகவும் அரைத்து பயன்படுத்துவார்கள். ஆகையால், நீங்கள் வெறும் மிளகாய் தூள் மட்டும் அரைக்க விரும்பினால் முதலில், 1 கிலோ வர மிளகாயை காயவைத்து அதிலுள்ள காம்பினை பாதியளவு நீக்கி விட்டு மிளகாயை எடுத்து கொள்ளுங்கள். இதனை மில்லில் கொடுத்து அரைத்து ஆறவைத்து சேமித்து கொள்ளுங்கள்.
1 கிலோ சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள் உங்களுக்கு தெரியுமா.?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |