3 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்

Advertisement

மூன்று கிலோ சிக்கன் பிரியாணி செய்முறை அளவுகளுடன் – 3kg Chicken Dum Biriyani Recipe in Tamil

3 kg Chicken biryani ingredients in tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக நன்றாக சமைக்க தெரிந்தவருக்கே. கொஞ்சம் அதிக அளவு சமைக்க வேண்டும் என்று அதற்கு எவ்வளவு அளவு பொருட்களை சேர்க்க வேண்டும் என்பதில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். சமையலே ஓரளவு தான் தெரியும் என்பவர்களின் 3 கிலோ அளவிற்கு சிக்கன் பிரியாணி செய்யுங்கள் சொன்னால் சொல்ல வேண்டாம். அவர்கள் அதில் கண்டிப்பாக சொதப்பி வைத்துவிடுவார்கள். இனி கவலை வேண்டாம் சமையலே ஓரளவு தான் தெரியும் என்பவர்கள் கூட மிக எளிதாக 3 கிலோ வரை சிக்கன் பிரியாணி செய்து அசத்திடலாம். எப்படி என்று தானே கேட்குறீர்கள். இங்கு மூன்று கிலோ அளவில் சிக்கன் பிரியாணி செய்வதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பது குறித்த தகவல்களை தான் பதிவு செய்துள்ளோம். ஆக அதனை பார்த்து மூன்று கிலோ அளவில் சிக்கன் பிரியாணி செய்து அசத்துங்கள். சரி வாங்க மூன்று கிலோ சிக்கன் பிரியாணி செய்ய எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

3 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் – 3 kg Chicken biryani ingredients in tamil

  • சமையல் எண்ணெய் – 600 ml
  • பொடிதாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1200 கிராம்
  • ஏலக்காய் – ஐந்து
  • கிராம்பு – ஐந்து
  • பட்டை – இரண்டு துண்டு
  • பச்சை மிளகாய் – 30 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 30 கிராம்
  • கொத்தமல்லி – மூன்று கையளவு
  • புதினா – மூன்று கையளவு
  • இஞ்சி – 300 கிராம், பூண்டு – 300 கிராம் சேர்த்து அரைத்த பேஸ்ட் – 600 கிராம்
  • மல்லி தூள் – 30 கிராம்
  • கரம் மசாலா – 25 கிராம்
  • தக்காளி – 900 கிராம்
  • தயிர் – 600 ml
  • சிக்கன் – மூன்று கிலோ
  • அரிசி – மூன்று கிலோ
  • தண்ணீர் – ஒரு படி அரசிக்கு 1½ தண்ணீர் ஊற்ற வேண்டும் ஆக நீங்கள்  பாத்திரத்தில் அரிசி எடுத்தீர்களோ அந்த பாத்திரத்தில் 1½ அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • நெய் – 100 ml

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
10 பேருக்கு சப்பாத்தி சுட வேண்டுமென்றால் எவ்வளவு மாவு தேவைப்படும்..!

சிக்கன் தம் பிரியாணி செய்முறை – 3kg Chicken Dum Biryani Recipe in Tamil:chicken dum biryani

அடுப்பில் ஒரு அடி கனமான மற்றும் அகலமான பாத்திரத்தை வைத்திருக்கவும்.

அதில் 600 ml எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும், எண்ணெய் சூடானதும், 1200 கிராம் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் ஏலக்காய் – ஐந்து, கிராம்பு – ஐந்து, பட்டை – இரண்டு துண்டு ஆகியவற்றை செய்து வதக்கவும்.

பிறகு அதனுடன் பச்சை மிளகாய் 30 கிராம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்குவதற்காக அந்த பாத்திரத்தை மூடி போடு மூடி இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு 30 கிராம் மிளகாய் தூள் சேர்த்து கிரளிவிடுங்கள்.

பிறகு கொத்தமல்லி இலை மூன்று கையளவு, புதினா மூன்று கையளவு சேர்த்து வதக்கவும்.

பின் இஞ்சி பூண்டு விழுது 300 கிராம் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதனுடன் 30 கிராம் மல்லி தூள், 25 கிராம் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்பதினால் அடிபிடிக்க ஆரம்பிக்கும், ஆக அடுப்பு தீயை மிதமான சூட்டில் வைத்துவிட்டு 900 கிராம் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கிய பின் அதனுடன் 600 ml தயிர் சேர்த்து கிளறிவிடுங்கள்.

பிறகு அதனுடன் மூன்று கிலோ கறியை சேர்த்து கிளறிவிடுங்கள். பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடம் நன்றாக வேகவைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து பார்க்கவும், பிறகு மசாலாவை நன்றாக கிளறிவிடவும் பிறகு கறி வெந்துலாத என்பதை பார்க்கவும், கறி 1/2 பதம் வெந்துவிட்டது என்றால் தண்ணீரை சரியான அளவு அளந்து ஊற்றிக்கொள்ளுங்கள். ஆக மூன்று கிலோ அரிசிக்கு எந்த பாத்திரத்தில் அரிசி அளந்திர்களோ அந்த பாத்திரத்தால் 1+½ அளவு தண்ணீர் ஊற்ற மற்றும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து உப்பு கரம் புளிப்பு இவை எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்துக்கொள்ளவும்.

பிறகு பாத்திரத்தை மூடி போடு நன்றாக கொதிக்கவிடவும், தண்ணீர் நன்கு கொத்தி வந்ததும் அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிடுங்கள். பிறகு இரண்டு நிமிடத்திற்கு அரிசியை வேகவைக்கவும், இரண்டு நிமிடம் கழித்து பாத்திரத்தை திறந்து பாருங்கள், அரிசி முக்கால் பதம் வெந்து தண்ணீர் வற்றிய பிறகு 100ml நெய் ஊற்றி மீண்டு ஒரு முறை நன்றாக கிளறிவிடுங்கள்.

பிறகு பாத்திரத்தை மூடி அதன் மீது ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் வைக்கவும். இரண்டுநிமிடம் ஓரங்களால் ஆவி அடிக்கும் வரை அடுப்பு ஏறியதும், ஆவி வந்த பிறகு அடுப்பை அணைத்து 10 நிமிடம் அப்படியே வேகவைக்கவும். அவ்வளவு தான் பிறகு பிரியாணியை ஒரு முறை நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சிக்கன் பிரியாணி தயார்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
6 பேருக்கு சிக்கன் கிரேவி செய்ய எவ்வளவு சிக்கன் தேவை.!

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement