வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்த தீபாவளிக்கு 50 முறுக்கு செய்ய எவ்வளவு அரிசி மாவு தேவைப்படும்

Updated On: October 15, 2025 3:52 PM
Follow Us:
50 murukku seiya thevaiyana porutkal
---Advertisement---
Advertisement

முறுக்கு செய்முறை

இந்த தீபாவளிக்கு எந்த பலகாரம் செய்கிறமோ இல்லையோ கண்டிப்பா எல்லாரும் வீட்டிலும் முறுக்கு சுடுவாங்க. இந்த முறுக்கை ஒரே முறையில் சுட மாட்டார்கள். அதாவது கொஞ்சம் முறுக்கு சுட்டு அதை சாப்பிட்ட பிறகு அடுத்த முறுக்கு சுடுவார்கள்.முறுக்கு சுடுவதற்குள் ஒரு போராட்டமே வீட்டில் நடக்கும், அதாவது எத்தனை முறுக்கு சுடுவது 25 சுடவா, 50 முறுக்கு சுடவா என்ற கேள்விகள் இருக்கும். இது கேள்விகள் இருக்கும் போதே அரிசி மாவை வாங்கி வந்து விடுவீர்கள். எவ்வளவு அரிசி மாவில் எவ்வளவு முறுக்கு சுடலாம் என்று அறிந்திருக்க வேண்டும். இதனை தெரிந்து கொள்வதற்கு யாரிடமாவது கேட்பீர்கள், அவர்களுக்கு தெரியவில்லை என்றால் மொபைலில் தான் தேடுவீர்கள். இந்த பதிவில் 50 முறுக்கு சுடுவதற்கு எவ்வளவு அரிசி மாவு தேவைப்படும் என்பதை அறிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் தமிழில் தேவையான பொருட்கள் ஆங்கிலத்தில்
அரிசி மாவு- 1 கிலோ Rice Flour- 1 kg
வெள்ளை எள் – 25 கிராம் White sesame- 25 gram
பெருங்காய தூள்- 25 கிராம் asafoetida- 25 gram
வெண்ணெய்- 4 தேக்கரண்டி Butter- 4 Spoon
உப்பு- தேவையான அளவு Salt-Required amount
எண்ணெய்- 3/4 லிட்டர் Oil- 3/4 liter

செய்முறை விளக்கம்:

முறுக்கு மாவு செய்முறை
முதலில் கனமான பாத்திரத்தில் அரிசி மாவு,  வெள்ளை எள், 2 தேக்கரண்டி வெண்ணெய், 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்  சேர்க்கவும்.  இது அனைத்தையும் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு கலந்து கொள்ளவும். பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். பின்பு நன்றாக பிசைந்து கொள்ளவும். இதில் அதிக சுவைக்க சிலர் பாசிப்பயிறு சேர்த்து கொள்கிறார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் 50 கிராம்  சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்பு ,மாவு நன்றாக முறுக்கு பதத்திற்கு வந்தவுடன் முறுக்கு அச்சியை எடுத்து உரலில் போட்டு கொள்ளவும். கடைசியாக ஒரு வாணலியில் முறுக்கு பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடாகும் வரை காத்திருக்கவும். சூடானதும் ஒரு சிறிய தட்டிலோ அல்லது இலையிலோ முறுக்கை பிளிந்துகொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் போட்டு 1 நிமிடம் வேகவிடவும் அதன் பின் திருப்பி போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும்.

7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு..?

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now