சிக்கன் குழம்பு மசாலா தேவையான பொருட்கள்
பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கனில் செய்த அனைத்து உணவும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் அசைவ வகை குழம்பு வைத்தால் மட்டும் தெருவே மணக்கும், ருசியும் அப்படி இருக்கும். அதற்கு அவர்கள் கை பக்குவம் ஒரு காரணம் என்றாலும், அவர்கள் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
அப்படி சுவையில் உங்கள் சிக்கன் குழம்பை மிஞ்ச ஆளே இல்லை என்று கூறும் அளவிற்கு அதில் சேர்க்க கூடிய சிக்கன் மசாலா செய்ய தேவையான பொருட்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
சிக்கன் குழம்பு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
மல்லி விதை –6 தேக்கரண்டி
சீரகம் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 8
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கையளவு
பட்டை – 4
கிராம்பு – 4
ஏலக்காய் –3
நட்சத்திர பூ –1
பிரியாணி இலை –1
ஆங்கிலத்தில் பொருட்களின் பெயர்கள்:
Coriander seed – 6 Table spoon
Cumin – 6 Table spoon
Anise – 1 Table spoon
Pepper – 1 Table spoon
Dry chillies – 8
Fenugreek – 1/4 Table spoon
Caraway leaves – Required amount
Band – 4
Cloves – 4
Cardamom – 3
Star Flower –1
Biryani leaves – 1
செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் ஒவ்வொன்றாக வருது கொள்ளவும், பிறகு இவை ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பவுடராக அரைத்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்துவது எப்போது:
நீங்கள் குழம்பு வைப்பதற்கு வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்த்து வதக்கிய பிறகு மசாலா சேர்ப்பதற்கு முன்பு நாம் செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கிய பிறகு மற்ற பொருட்களை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
30 நபருக்கு சைவ பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |