400 சதுர அடியில் 2 அடுக்கு வீடு
பொதுவாக வீட்டை அப்படி கட்ட வேண்டும் இப்படி கட்ட வேண்டும் என்ற பல ஆசைகள் இருக்கிறது. நம்ம வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று plan செய்கிறார்கள். வீட்டை கட்டுவதற்கான பிளான் செய்கிறார்கள். ஆனால் நம்மிடம் எவ்வளவு இடம் இருக்கிறது அந்த இடத்தில் எவ்வாறு கட்ட வேண்டும் என்று யோசிப்பதில்லை. ஆடம்பரமாக வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் வீடு கட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் சேமித்த பணத்தை விட அதிகமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் வீடு கட்டுவதற்கு முன்பே இவ்வளவு தான் செலவாகும் என்று பிளான் செய்து கட்ட வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களிடம் 400 சதுரடி இடம் இருந்தால் அதில் 2 படுக்கையறை உடன் இரண்டு அடுக்கில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..
400 சதுர அடியில் 3 படுக்கை அறை கொண்ட வீடுகட்ட ஆகும் செலவு:
400 சதுர அடிக்கு ஆகும் சிமெண்ட்:
400 சதுர அடி வீடு கட்டுவதற்கு சிமெண்ட் 260 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டை 440 ரூபாய் என்றால் 260 முட்டையினை வாங்க ரூபாய் 1,14,400 தேவைப்படும்.
400 சதுர அடிக்கு ஆகும் ஸ்டீல் :
அடுத்து ஸ்டீல் 2 1/2 டன் தேவைப்படும். ஒரு டன் 95,000 ரூபாய் அப்போ 2 1/2 டன் ஸ்டீல் விலை 1,22,500 ரூபாய் ஆகும்.
M சாண்ட் 9 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 7 யூனிட் மணல் வாங்குவதற்கு 34,200 ரூபாய் தேவைப்படும்.
550 சதுர அடியில் வீடுகட்ட, செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா?
P சாண்ட் 4 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 5000 ரூபாய் என்றால் 2 யூனிட் விலை 20,000 ரூபாய் தேவைப்படும்.
20 mm aggregate 5 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 3 யூனிட் விலை 10,000 ரூபாய்.
40 mm aggregate 2 1/2 யூனிட் வேண்டும். ஒரு யூனிட் விலை 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 2 1/2 யூனிட் விலை 8,400 ரூபாய்.
TNEB புதிய மின் கட்டணத்தை கணக்கிட வேண்டுமா? TNEB bill கால்குலேட்டர் 2023
செங்கல் 9000 கல் தேவைப்படும். ஒரு கல் 13 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ 9000 கல்லின் விலை 1,17,000 ரூபாய் தேவைப்படும்.
டைல்ஸ் 600 தேவைப்படும். இதற்காக 50,000 ரூபாய் தேவைப்படும்.
மேல் கூறப்பட்ள்ள பொருட்கள் மட்டும் வாங்குவதற்கு மொத்த தொகையாக தோராயமாக 4,79,300 ரூபாய் தேவைப்படும்.
மேல் கூறியுள்ளவை முக்கியமான பொருட்கள் மட்டும் தான் சொல்லப்பட்டிருக்கிறது, இது இல்லாமல் ஆட்கள் கூலி, பெயிண்ட் அடிக்கும் செலவு, கதவு, ஜன்னல் போன்றவற்றிற்கான ஆசாரி செலவுகள் எல்லாம் இருக்கின்றது. அதனால் தோராயமாக 400 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 10 லட்சம் தேவைப்படும். இந்த செலவுகள் அனைத்தும் தோராயமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது. இதை விட கூடவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |