TNEB புதிய மின் கட்டணத்தை கணக்கிட வேண்டுமா? TNEB bill கால்குலேட்டர் 2023 

Advertisement

 TNEB Bill கால்குலேட்டர் 2023 

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்துகின்றோம் என்பது நமக்கு தெரியும். ஆனால் அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது. அது முறையான கணக்கிடுத்தான, ஒவ்வொரு யூனிட் மின்சார பயன்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன, ஒரு யூனிட் நுகர்வு அதிகரித்தல் எவ்வளவு கட்டணம் அதிகரிக்கும் இது போன்ற தகவல்களை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. வாருங்கள்,  இன்று நாம் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்று தெரிந்து கொள்வோம்.

TNEB புதிய மின் கட்டண கணக்கிடு:

வெவ்வேறு கட்டணங்களுடன் பயன்படுத்தும் அடிப்படையில் மின்சாரக் கட்டணத்தை வசூலிக்கும் முறையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது, நீங்கள் 600 யூனிட்களை பயன்படுத்துகின்றிர்கள் என்றால், யூனிட் அளவுகளின் ஒவ்வொரு படிக்கும் வெவ்வேறு விலைகளைப் பெறுவீர்கள். 100 வரை குறைந்த யூனிட்கள் இப்போது அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. 100 க்கு மேல் அதிகரிக்கும் ஒவ்வொரு யூனிட்டுக்கு கட்டணம் சிறிது சிறிதாக உயருகிறது. 500 unit வரை சிறிய அளவிலான உயர்வுகள் இருக்கும்.

நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு 500 யூனிட்டை தாண்டும் போது நமது கட்டணம் அதிகரிக்கிறது.

வாருங்கள் எப்போது 100 யூனிட்க்கு மேல் அதிகரிக்கும் ஒவ்வொரு யூனிட்க்கும் எவ்வாறு கட்டணத்தை கணக்கிடுகின்றார்கள் என்று பார்ப்போம்.

2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் சமீபத்திய தற்காலிக கட்டண மானியத்தின்படி, TNEB கட்டணமானது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது 500 யூனிட்டுகளுக்கு குறைவான மற்றும் 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கான கட்டணம் என மாறுபடுகிறது.

500க்கும் குறைவான அளவுகள்:

மக்களின் பயன்பாடும் மின்சாரம் 500 யூனிட்டுகளுக்குக் குறைவாக இருந்தால்,

முதல் 100 யூனிட்டுகளுக்கு பூஜ்ஜியக் கட்டணத்தையும் அடுத்த 100 யூனிட்டுக்கு ரூபாய் 2.25கட்டணத்தையும் வசூலிக்கின்றார்கள். அதாவது 101 முதல் 200 வரையிலான நுகர்வுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 2.25 வசூலிக்கப்படுகிறது.

200 முதல் 400 வரையிலான யூனிட் பயன்பாட்டிற்கு ஒரு யூனிட்டிற்கு ரூபாய் 4.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

400 முதல் 500 வரையிலான நுகர்வுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6 வசூலிக்கப்படுகிறது.

500 க்கும் மேற்பட்ட அலகுகள்:

500 க்கும் மேற்பட்ட unit நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்டிற்கு பூஜ்ய கட்டணமும் அடுத்த 300 unit க்கு ரூபாய் 4.5 வசூலிக்கப்படுகிறது. அதாவது யூனிட் 101 முதல் 400 வரை ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூபாய் 4.5 வசூலிக்கப்படுகிறது. யூனிட் 401 முதல் 500 வரை 6 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

501 முதல் 600 வரை யூனிட் வரையான பயன்பாட்டிற்கு கட்டணமாக ரூபாய் 8 வசூலிக்கப்படுகிறது.

601 முதல் 800 யூனிட்டுகளுக்கு 9 ரூபாயும் 801 முதல் 1000 யூனிட்களுக்கு  ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூபாய் 10 வரை வசூலிக்கப்படுகிறது.

மீதமுள்ள அனைத்து யூனிட்டுகளுக்கான நுகர்வுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 11 வசூலிக்கப்படுகிறது.

TNEB Bill Calculator 2023 in Tamil:

பயன்படுத்தும் யூனிட்  யூனிட்டிற்கான கட்டணம் (₹)
500 க்கும் குறைவான யூனிட் பயன்பாட்டிற்கு  0-100 0
101-200 2.5
201-400 4.5
401-500 6
500 க்கும் அதிகமான யூனிட் பயன்பாட்டிற்கு  0-100 0
101-400 4.5
401-500 6
501-600 8
601-800 9
801-1000 10
>1000 11

 

எடுத்துக்காட்டு:

ஒரு நுகர்வோர் 263 யூனிட் பயன்படுத்துகிறார் என்றால் அவர் எவ்வளவு தொகை கட்டணமாக செலுத்துவர்.

263 யூனிட்டுகளுக்கு மின்கட்டணம் கணக்கிடுவோம்.

முதல் 100 யூனிட் க்கு கட்டணம் எதுவும் இல்லை.

அடுத்த 163 யூனிட்க்கு மட்டும் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

101 முதல் 200 வரையிலான யூனிட்டுக்கு, ஒரு யூனிட்டுக்கு  ரூபாய் 2.25 வசூலிக்கப்படுகிறது.

அப்படி என்றால்  100 யூனிட் உடன் 2.25 பெருக்க கிடப்பது 225 ஆகும்.

அடுத்து மீதம் உள்ளது 201 முதல் 263 யூனிட் வரையான கட்டணம்

201 முதல் 400 வரை ரூபாய் 4.5 வரை வசூலிக்கப்படுகிறது. அப்படி என்றால் மீதம் இருக்கும் 63 யூனிட்க்கு ஒரு யூனிட்க்கு 4.5 விதம் 63 யூனிட்க்கு ரூபாய் 283.5 வசூலிக்கப்படும்.

மொத்தமாக 225+283.5 = 508.5 ருபாய் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் எது போன்ற பயனுள்ள தகவலுக்கு எங்கள் தளத்தை பின் தொடருங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

 

Advertisement