Necessary Items For a Newborn Baby in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவிலும் பெண்களுக்கு பயன்படும் வகையில் ஒரு பதிவினை பற்றி பார்க்கலாம். அதாவது, புதிதாய் தாயானார்களுக்கு குழந்தைகளுக்கு என்ன தேவை.? குழந்தைகளை எப்படி பாத்துக்கொள்ள வேண்டும்.? என்பதில் பல குழப்பங்கள் இருக்கும். ஆகையால், தாய்மார்களுக்கு பயனுள்ள வகையில் பிறந்த குழந்தைக்கு என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை இப்பதிவில் விவரித்துள்ளோம்.
குழந்தை முதன் முதலில் இவ்வுலகத்தை பார்க்கும்போது அக்குழந்தைக்கு சுற்றுசூழல் வேறு விதமாக இருக்கும். ஆகையால், குழந்தையை பாதுகாப்பாக பார்த்து கொள்வது அவசியம். ஆகையால், பிறந்த குழந்தைக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
பிறந்த குழந்தைக்கு வாங்க வேண்டிய பொருட்கள்:
ஆடை:
பிறந்த குழந்தைக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருட்களில் ஆடை ஒன்று. ஆகையால், முதலில் ஆடை வாங்குவது அவசியம். அதாவது, கடைகளில் பிறந்த குழந்தைக்களுக்கென்றே பல வகைகளில் ஆடைகள் உள்ளது. முக்கியமாக, குழந்தை கதகதப்பாக இருக்கும் வகையில் பனியன் துணியில் கிடைக்கும் தலையுறை, துண்டுகள், பனியன்கள் போன்றவற்றை வாங்க வேண்டும்.
பெட்:
பிறந்த குழந்தைகள் அதிகமாக தூங்கிக்கொண்டே இருக்கும். ஆகையால், குழந்தைக்கு மென்மையாக இருக்கக்கூடிய படுக்கையாக பார்த்து வாங்க வேண்டும். மேலும், முக்கியமாக, கொசு வலையுடன் கூடிய படுக்கையை வாங்குவது அவசியம். அதுமட்டுமில்லாமல், குழந்தை அடிக்கடி சிறுநீர் கழித்து கொண்டே இருக்கும். அதனால், சிறுநீர் உறிஞ்சும் டவலும் வாங்க வேண்டும்.
பேபி வைப்ஸ்:
பிறந்த குழந்தைகளுக்கு முக்கியாக பேபி வைப்ஸ் வாங்க வேண்டும். குழந்தைகள் மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும்போது நீரினை பயன்படுத்தாமல் பேபி வைப்ஸ் கொண்டு துடைத்து எடுப்பதற்கு பேபி வைப்ஸ் தேவைப்படும். ஆகையால், நல்ல தரமான பேபி வைப்ஸ்களை பார்த்து வாங்க வேண்டும்.
வளைகாப்பு செய்ய தேவையான பொருட்கள்..
டயப்பர்:
பிறந்த குழந்தைகளுக்கு எது முக்கியம் என கேட்டால் அனைவரும் டயப்பர் என்று தான் கூறுவார்கள். டயப்பர் குழந்தைகளுக்கு அழற்சி ஏற்படுத்தும் என்றாலும் வெளியிடங்களுக்கு செல்லும்போதும், மருத்துவமனையில் இருக்கும்போது பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆகையால், மறக்காமல், டயப்பர்கள் வாங்கி கொள்வது அவசியம்.
நகம் வெட்டி:
குழந்தைகளின் கையில் நகம் இருந்தால் முகத்தில் கீறிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகையால் குழந்தைக்கும் நகம் வெட்டி மெனிக்யூர் செய்ய வேண்டும்.
ஊஞ்சல்:
குழந்தைகளை இடையூறு இல்லாமல் தூங்க வைக்க ஊஞ்சல் வாங்கி கொள்ள வேண்டும். ஒரு சில நேரங்களில் குழந்தைகள் ஊஞ்சலில் தூங்க வைத்தால் தான் தூங்கும். ஆகையால் ஊஞ்சல் வாங்கி கொள்வது நல்லது.
கை, கால் உறை:
குழந்தைகளின் பிஞ்சு கை, கால்களை மறைக்க உதவும் சாக்ஸ் போன்ற உறைகளை வாங்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் கை, கால்கள் கதகதப்பாக இருக்கும்.
மசாஜ் ஆயில்:
குழந்தைகளை குளிப்பாட்டும் முன் மசாஜ் ஆயில் தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்து விடுவார்கள். ஆகையால், குழந்தைகளுக்கென்று பேபி ஆயில் என்று கூறப்படும் மசாஜ் ஆயில் வாங்கி கொள்வது நல்லது.
பிறந்த குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுப்பது எப்படி?
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |