Sweet Pongal Recipe Ingredients in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சர்க்கரை பொங்கல் செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை கொடுத்துள்ளோம். அனைவருக்கும் பொங்கல் வைக்க தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று தான்கூறுவார்கள். ஏனென்றால் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு பொங்கல் வைக்க தெரியாது, ஏன் இன்னும் சொல்ல போனா பொங்கல் வைக்க என்னென்ன பொருட்கள் வேண்டும் என்று கூட தெரியாது.
அம்மாவிடம் தான் போன் பண்ணி பொங்கல் செய்ய என்ன பொருட்கள் தேவைப்படும், எவ்வளவு அரிசிக்கு எவ்வளவு சர்க்கரை தேவைப்படும் என்றெல்லாம் கேட்டு கொள்வோம் அல்லவா.! அம்மா என்ன செய்வார்கள் நம்மை இது கூட தெரியவில்லையா என்று திட்டி விட்டு அதன் பிறகு தேவையான பொருட்களை கூறுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் சக்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
1 கிலோ பச்சரிசியை சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்களை பற்றி அறிந்து கொள்வோம்.
⇒ பச்சரிசி – 1 கிலோ
⇒ பாசிப்பருப்பு – 1/4 கிலோ
⇒ வெல்லம்- 3/4 கிலோ
⇒ பால் – 200 மில்லி லிட்டர்
⇒ ஏலக்காய் பொடி- 2 தேக்கரண்டி
⇒ உப்பு- தேவையான அளவு
⇒ நெய்- 1/2 லிட்டர்
⇒ முந்திரி பருப்பு- 50 கிராம்
⇒ திராட்சை- 50 கிராம்
சர்க்கரை பொங்கலுக்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள், அதனை சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வெண்பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:
⇒ பச்ச அரிசி – 1 கிலோ
⇒ முந்திரி பருப்பு –15
⇒ பால் – 1/2 கப்
⇒ தேங்காய் – 2 மூடி
⇒ உப்பு – தேவையான அளவு
வெண்பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை தெரிந்து கொண்டீர்கள், அதனை எப்படி சுவையாக வைப்பது என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |