மூட் அவுட்டா அப்போ இதை செய்யுங்க 2 நிமிடத்தில் ஜாலியா மாறிடலாம்

Advertisement

மகிழ்ச்சியாக இருக்க

மனிதர்களாக பிறந்த அனைவருமே எப்போதுமே ஜாலியா இருக்க முடியாது, சில நேரங்களில் கஷ்டமான சூழ்நிலை ஏற்படும். அப்போது மூட் அவுட் ஆகிவிடுவோம். இதிலிருந்து விடுபடுவது சாதாரண விஷயம் அல்ல. எப்படி இதிலிருந்து விடுபடுவது என்று சிந்தித்து கொண்டிருப்பீர்கள். அதனில் தான் இந்த பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் மூட் அவுட்டாக இருந்தால் எப்படி மகிழ்ச்சியாக மாற்றலாம் என்று தெரிந்து கொள்வோம்.

போட்டோ:

மகிழ்ச்சியாக இருக்க

நீங்கள் மூட் அவுட்டாக இருக்கும் போது சிறு வயது ஆல்பம் அல்லது பிடித்தமான போட்டோக்களை பார்த்தால் உங்களின் மன கவலை நீங்கிவிடும் என்று இங்கிலாந்து ஓபன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவர்கள் போட்டோ அல்லது நடந்த சிறு வயதில் நடந்த நிகழ்வுகள் நடந்ததை நினைத்து பார்த்தாலும் மூட் அவுட் சரியாகிடும்.

வாசனை:

வாசனை நிறைந்த பொருட்களை பார்ப்பது உங்களது மூட் அவுட்டை மாற்ற கூடும். அதனால் வாசனை நிறைந்த பூக்கள் மற்றும் பவ்யும் போன்றவற்றை நுகர்ந்து பார்க்கலாம். இதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சி ஆகிவிடுவீர்கள்.

ஆளுமை திறனை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..

மொபைல் பார்ப்பது:

மகிழ்ச்சியாக இருக்க

நீங்கள் மனம் விட்டு சிரித்தாலே புத்துணர்ச்சி ஆகிவிடுவீர்கள். அதனால் உங்களுக்கு பிடித்த காமெடி அல்லது வீடியோக்கள் போன்றவற்றை பார்த்தாலே நார்மல் ஆகிவிடுவீர்கள். மேலும் பாட்டு கேட்பது உங்களை புத்துணர்ச்சி ஆக்குவதோடு மட்டுமில்லாமல் உங்களை மகிழ்ச்சியடைய வைக்கும்.

வேலை செய்வது:

நீங்கள் மூடு அவுட்டாக இருக்கும் போது சமைப்பது அல்லது கிராப்ட் செய்வது போன்ற வேலைகளை செய்யலாம். நீங்கள் இப்படி வேலை பார்க்கும் போது அந்த வேலையில் உங்களுடைய கவனம் வந்து விடும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக மாறிவிடுவீர்கள்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி செய்தால் உங்களுடைய மனது மகிழ்ச்சி அடையும். அதனால் காலை எழுந்ததும் உடற்பயிற்சி செய்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமில்லாமல் உங்களை புத்துணர்ச்சியாகவும் வைத்து கொள்ளும்.

யாரிடமாவது பேசுங்கள்:

உங்கலின் மனது பிடித்தவருடன் நேரிலோ அல்லது மொபைலிலோ பேசுங்கள். இப்படி பேசுவதினால் உங்களுடைய மூடை மாற்றுவதற்கு உதவுகிறது.

மூட் அவுட்டாகி விட்டது என்று கவலை அடையாமல் வேறு வேலையில் கவனம் செலுத்தினாலே மகிழ்ச்சியாக மாறிவிடுவீர்கள்.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 
Advertisement