ஆளுமை திறனை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..

Advertisement

ஆளுமை திறனை வளர்த்து கொள்வது எப்படி 

உங்களுடைய வாழ்கையில் வெற்றியை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஆளுமை திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனென்றால் நீங்கள் பள்ளியில் படிக்கிறீர்கள் என்றால் மற்ற மாணவர்களை விட நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கான அங்கீகாரமாக லீடர் என்ற பொறுப்பை கொடுப்பார்கள்.  அது போல பணியிடத்தில் சிறந்து விளங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கான அதிகாரமும் கொடுப்பார்கள். இதில் உங்களுடைய ஆளுமை திறனை வளர்ப்பது எப்படி என்று தெரியவில்லை என்றால் இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க ஆளுமை திறனை வளர்த்து கொள்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களை பற்றி அறிந்து கொள்ளுதல்: 

ஆளுமை திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்களை பற்றி அறிந்திருக்க வேண்டும். உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாராவது உங்களை பற்றி சொல்கிறார்கள் என்றால் அதனை கவனமாக கேட்க வேண்டும். அவற்றில் ஏதும் குறைகள் இருந்தால் அதனை மாற்றி கொள்வதற்க்கு முயற்சிக்க வேண்டும்.

பலம் மற்றும் பலவீனம்:

ஆளுமை திறனை வளர்த்து கொள்வது எப்படி 

உங்களை பற்றி அறிந்து கொள்வது அவசியமானதாகும். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்ள வேண்டும். உங்களின் பலத்தை அறிந்து கொண்டு அதனை மேலும் சிறப்பானதாக மாற்ற வேண்டும். உங்களின் பலவீனத்தை பலமாக மாற்ற வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே உங்களின் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

நீங்கள் நேரத்தை சரியாக பயன்படுத்துகிறீர்களா.!

முடிவெடுக்கும் திறன்:

 

நீங்கள் முடிவெடுக்கும் திறனை சீக்கிரமாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பிரச்சனை என்றால் அதனை விரைந்து முடிவெடுக்கும் எடுக்க வேண்டும். அதுவே வீட்டில் பிரச்சனையாக இருந்தால் உடனே முடிவெடுக்க கூடாது, ஏனென்றால் நெனெகல் எடுக்கும் முடிவானது மற்றவர்களுக்கு பிரச்சனையாக இருக்கலாம். அதனால் வீட்டில் முடிவுகளை எடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்து ஆலோசிப்பது நல்லது.

லட்சியம் இருக்க வேண்டும்:

நீங்கள் ஆளுமை பொறுப்பில் இருக்கிறீர்கள் என்றால் லட்சியம் இருக்க வேண்டும். உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவருக்கு சரியாக கூற முடியவில்லை என்றால் அதனை நீங்கள் வளர்த்து கொள்ள வேண்டும். மற்றவரிடம் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை நன்றாக கூற வேண்டும் என்ற இலக்கு இருத்தல் வேண்டும்.

ஆர்வம் இருக்க வேண்டும்:

நீங்கள் எப்போதும் போல இருத்தல் ஆளுமை திறனுக்கு ஏற்றதாக இருக்காது. புதிய புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்க வேண்டும். ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். நீங்கள் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொண்டாலே உங்களிடம் ஆளுமை திறன் காணப்படும்.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி.?

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 
Advertisement