How to Overcome Shyness
மனிதர்களுக்கு இருக்கும் குணங்களில் கூச்சம் என்பது நம்மை வளர விடாமல் தடுக்கும் செயலாக இருக்கிறது. பழகியவர்களிடம் நாம் எந்த வித வெட்கமும் இல்லாமல் பேசுவோம். அதுவே தெரியாதவர்களிடமோ அல்லது கூட்டமாக இருக்கும் இடத்தில் பேச சொன்னால் அவர்களுக்கு பேசவே வராது. நமக்கு தெரிந்த விஷயத்தை கூட இந்த கூச்சத்தினால் பேசவே வராது.
இதனால் அவர்களின் திறமை ஆனது வெளியிலே தெரியாமல் போகிவிடும். இந்த கூச்சமானது நமது வளர்ச்சிக்கு முட்டு கட்டையாக இருக்கிறது. அதனால் இதனை தடுப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
வளர்ச்சி:
ஒருவர் நல்லா தான் பேசி கொண்டிருப்பார், அதுவே மேடையிலோ அல்லது 4 பேர் இருக்கும் இடத்தில் பேச சொன்னால் பேச்சே வராது, இவர்களுக்கு இருக்கும் தயக்கத்தினால் பேச்சே வரமால் தவிர்ப்பார்கள். இந்த கூச்சம் மட்டும் இல்லையென்றால் நான் எங்கேயோ போகிருப்பேன் என்று புலம்புவதை பார்த்திருப்போம்.
குறைகளை பார்க்க வேண்டும்:
நம்மிடம் உள்ள குறைகளை முதலில் அறிந்து கொண்டு அதனை நாம் நிறைகளாக மாற்ற வேண்டும். நமக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டால் நம்மிடம் பயமோ அல்லது கூச்சமோ இருக்காது. எந்த செயலையும் செய்தாலும் சரி அல்லது 10 நபருக்கு முன்னால் பேச சொன்னாலும் சரி தைரியமாக பேசுவோம்.
நம்மிடம் உள்ள குறைகளை தெரிந்து கொண்டு அதனை நிறைகளாக மாற்றுவது நம்மால் மட்டும் தான் முடியும். நீங்கள் ஒரு விஷயம் தெரியவில்லை என்று இருந்தால் அப்படியே தான் இருக்க வேண்டும்.
ஆளுமை திறனை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..
ஆப்ரகாம் லிங்கன்:
ஆப்ரகாம் லிங்கன் திக்கு வாய் இருப்பதாக உணர்ந்து அப்படியே அவர் கூச்சப்பட்டு இருந்தால் அவர் வாழ்க்கையில் முன்னேறிருக்க முடியாது. தன்னுடைய கூச்சத்தை நீக்கி விலகி வந்ததுனால தான் புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஆக முடிந்தது. திக்கு வாய் கொண்ட இவர் தான் புகழ்பெற்ற உரையான கெட்டிஸ்பர்க் உரை நிகழ்த்தினார்.
கூச்சப்படும் விஷயம்:
எதற்கு நாம் கூச்சப் படுகிறோமோ அந்த விஷயத்தைத் திரும்பத் திரும்ப செய்வதன் மூலமாக அந்த கூச்சத்தில் இருந்து வெளிவர முடியும்.
உதாரணத்திற்கு ஒருவருக்கு கேமரா முன் வருவதற்கு கூச்சமாக இருக்கிறது என்றால் அடிக்கடி கேமரா முன்பு சென்று போட்டோ அல்லது வீடியோ எடுக்கும் பொழுது நமது கேமரா கூச்சத்தை போக்கலாம்.
கூட்டமாக இருக்கும் இடங்களில் நின்று பேசுவதற்கு கூச்சமாக இருக்கிறது என்றால் அடிக்கடி கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு போய் நின்று பேசுவதற்கு முயல வேண்டும். அவ்வாறு திரும்பத் திரும்ப செய்வதால் நமக்கு கூட்டத்தின் முன்பு பேசுவதற்கு உள்ள கூச்சம் போய்விடும்.
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |