பதற்றம் குறைய வழிகள்
பெரும்பாலும் மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே இன்பம், துன்பம், சந்தோசம், கோபம், அழுகை போன்றவை ஏற்பட கூடிய ஒன்று தான். ஆனால் இவையாவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்முடைய குணம் மாறுபடும். யாராவது நம்மை திட்டினால் நாம் அழுது விடுவோம். இந்த குணங்களில் பயமும் ஒன்றாக தான் இருக்கிறது.
இந்த பயமானது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அதாவது சில பேருக்கு பாம்பை கண்டால் பயமாக இருக்கும், சில பேருக்கு இருட்டை கண்டால் பயமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் படபட என்று ஏற்படும். இதனை எப்படி தடுப்பது எப்படி என்று பலருக்கும் தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் படபடப்பு குறைய எளிய வழிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
தியானம் செய்ய வேண்டும்:
தியானம் செய்வதால் மன அமைதி கிடைக்கும், உடலுக்கும் பல நன்மைகளை அள்ளி தருகின்றது. அதனால் நீங்கள் தினமும் தியானம் செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவித்து மட்டுமில்லாமல் உங்களுக்கு ஏற்படும் படபடப்பிலிருந்தும் நிவாரணம் தர கூடியது.
மேலும் உங்களின் மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும். இந்த மூச்சு பயிற்சியை 5 நிமிடம் முதல் 10 நிமிடமும் வரைக்கும் செய்யலாம். இதன் மூலம் பதற்றத்தை தவிர்க்கலாம்.
ஆளுமை திறனை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..
எப்படி பதற்றம்:
நீங்கள் பதற்றம் ஏற்படும் சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். அதன் பிறகு இந்த பதற்றமானது எவ்வளவு நேரம் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இதனை நீங்கள் அறிந்து கொள்வதன் மூலம் பதற்றத்தை புரிந்து கொள்வீர்கள். இதற்க்கெல்லாம் பதற்றம் ஆக கூடாது என்று உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்வீர்கள்.
பாடல்:
பாடல் கேட்பதால் மன அமைதி கிடைக்கும், மனதில் உள்ள கவலைகள் நீங்கும். இசையை கேட்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்வதற்குஉதவுகிறது. அதனால் நீங்கள் பதற்றமாக இருக்கிறீர்கள் என்றால் பாடல்களை கேளுங்கள்.
நேர்மறை எண்ணங்கள்:
நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வதன் மூலம் உங்களின் தன்னம்பிக்கையானது அதிகரிக்கும். அதனால் எந்த சூழ்நிலையிலும் நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்கள் நல்லதாக இருந்தால் பதற்றம் பயம் எல்லாம் நீங்கி விடும்.
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |