வாழ்க்கையின் வெற்றிக்கு இந்த விஷயங்களை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க

Advertisement

வாழ்க்கையின் வெற்றிக்கு இந்த விஷயங்களை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க

நாம் கோவிலுக்கு சென்று வேண்டி கொள்வோம், கூட இருப்பவர்கள் என்ன வேண்டி கொண்டாய் என்று கேட்பார்கள். வேண்டுதலை வெளியில் கூறினால் பலிக்காது என்று கூறுவார்கள். கடவுளிடம் வேண்டுதலை சொன்னால் பலிக்காது என்பதை நம்புகிறோம். ஆனால் நீங்கள் வாழ்க்கையில் அடுத்தது என்ன செய்ய போகிறீர்கள் என்பதை மட்டும் வெளியில் சொன்னால் பலிக்குமா.! நிச்சயம் பலிக்காது.

நிறைய நபர்களுக்கு அனுபவம் இருக்கும் என்று நம்புகிறேன், அதாவது நண்பர்களோடு வெளியே செல்ல வேண்டும் என்று திட்டம் போடுவீர்கள். ஆனால் திட்டம் போடுவதோடு சரி அதனை செயல்படுத்த சூழ்நிலை ஏற்படும். இது போல் வெளியில் சொல்ல கூடாத விஷயங்கள் என்னவென்று இந்த பதிவை படித்து அறிந்து கொள்ளுங்கள்.

குடும்பம் பிரச்சனை:

வீடு என்று இருந்தால் அதில் பிரச்சனை இல்லாமல் இருக்காது, வீட்டிற்கு வீடு எப்படி வாசற்படி இருக்கிறதோ அது போல பிரச்சனைகளும் இருக்கும். இந்த பிரச்சனைகளை உங்கள் வீட்டிலேயே முடித்து கொள்வது நல்லது. ஏனென்றால் நீங்கள் உங்க குடும்ப பிரச்சனையை மற்றவர்களிடம் சொல்லும் போது அந்த பிரச்சனையை பெரிதாக்கும். அதோடு மட்டுமில்லாமல் குடும்பத்தில் இருப்பவர்களோடு பிரிவை ஏற்படுத்தும்.

வேலையின் திட்டம்:

நீங்கள் வேலை செய்யும் இடத்தில் ஏதவாது புதிதாக ஐடியா வைத்திருந்தீர்கள் என்றால் அதனை மற்றவர்களிடம் கூறாதீர்கள். ஏனென்றால் நீங்கள் வைத்திருக்க கூடிய திட்டத்திலிருந்து அவர்கள் ஒரு ஆலோசனையை கூறுவார்கள், இதனால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியமால் கூட போகும்.

உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?

பதற்றம்:

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருவருக்கும் பலம் மற்றும் பலவீனம் இருக்கும். இதனை நீங்கள் வெளியில் சொல்ல கூடாது. ஏனென்றால் நீங்கள் இதனை வெளியில் சொல்வதானால் உங்களுடைய பலவீனம் இது தான் என்று தெரிந்து விடும். இதன் மூலம் உங்களை முன்னேற முடியாமல் போகிவிடும்.

வருமானம்:

நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் உங்களுடைய சம்பளத்தை பற்றி கேட்பார்கள். அப்போது நீங்கள் உங்களுடைய உண்மையான சம்பளத்தை வெளியில் சொல்லாதீர்கள். நீங்கள் உண்மையான சம்பளத்தை வெளியில் சொல்வதன் மூலம் உங்களால் செலவுகளை வெளியில் சமாளிக்க முடியாது.

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 

 

Advertisement