உங்க வீட்ல பூவரச மரம் இருக்கா.! அப்போ இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

Advertisement

பூவரசு மரம் பயன்கள் | Poovarasam Maram

பலரது வீட்டில் செடிகள், பூச்செடிகள், மரங்கள் போன்றவை வளர்ப்பதற்கு ஆசைப்படுவார்கள். சில செடிகள், மரங்கள் எல்லாம் வளர்ப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் சில மரம் மற்றும் செடிகள் எல்லாம் நாம் வளர்க்காமலே அதுவாக வளர்ந்து விடும். அப்படிப்பட்ட மரங்களில் ஒன்று தான் பூவரச மரம். இந்த மரம் எல்லாரும் வீட்டிலும் இருக்கும். இந்த மரத்தின் பல்வேறு பயன்களை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூவரச மரம் பயன்கள்:

பூவரச மரம் எப்படி இருக்கும்

பூவரச மரத்தின் இலைகளை பறித்து அரைத்து கொள்ளவும். இதனை உடம்பில் புண், சொறி, சிரங்கு, தேமல் போன்றவை உள்ள இடத்தில் தடவி விடவும்.

தேமல் மற்றும் படர்தாமரை போன்ற பிரச்சனையை சரி செய்வதற்கு பூவரச மரத்தின் காய்களை நச்சு கொள்ளவும். காய்களை நச்சு போது மஞ்சள் நிறத்தில் பாலாக வரும். இதனை தேமல் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் தேமல் குணமாகிவிடும்.

பூவரசு மரத்தின் வேர்ப்பட்டையை நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரிலிருந்து 50 மில்லி எடுத்து கொள்ளவும். இதனுடன் 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றி குடித்தால் மலம் நன்றாக வெளியேறும்.

இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே. 

பூவரச மரத்தின் அழகு குறிப்புகள்:

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது. இதற்கு பூவரச பட்டையின் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். சூடு ஆறியதும் இந்த தண்ணீரை பயன்படுத்தி புண் உள்ள இடத்தில் கழுவி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

கை முட்டி கருமை, அக்குள் கருமை, கழுத்து கருமை, கால் முட்டி கருமை போன்றவற்றிற்கு பூவரசன் இலைகள் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பூவரச இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் ஆறியதும் கருமையாக உள்ள இடத்தில் தடவி வந்தால் கருமை நீங்கி விடும்.

பூவரசு மரத்தை வைத்து என்ன செய்யலாம்:

பூவரச மரம் எப்படி இருக்கும்

பூவரசு மரத்தின் வளர்ச்சியை பொறுத்து நல்ல விலைக்கு விற்கலாம். இதை வாங்கி என்ன செய்வார்கள் என்று யோசிக்கிறீர்களா.! இந்த மரத்தை வைத்து வீட்டிற்கு தேவையான பொருட்களை தயாரிக்க பயன்னபடுகிறது.

இதனுடைய இலைகளை வடை தட்டுவதற்கு பயன்படுத்துவார்கள். அதாவது இந்த பூசன இலையில் தண்ணீரை தடவி விட்டு வடையை தட்டினால் வடை வடிவம் மாறாமல் அழகாக வந்து விடும். நம் முன்னோர்கள் எல்லாம் இந்த இலையை பயன்படுத்தி தான் வடை தட்டினார்கள். இன்றைய கால கட்டத்திலும் சில கிராம புறங்களில் பயன்படுத்துகின்றனர்.

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose

 

Advertisement