டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? | Group 4 Exam Date 2022 Tamil
TNPSC Group 4 தேர்வு எழுதும் நண்பர்களின் கவனத்திற்கு.. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 – அதாவது வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது அதை குறித்த தகவல்களை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு பற்றிய தகவல்:
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் வெளியான வருடாந்திர தேர்வு கால அட்டவணை மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றனர். மேலும் இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் ஒன்று ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது.
அதாவது குரூப் -1, குரூப் -2, குரூப் -4 என்ற பிரிவின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளில் பல லட்சம் போட்டி தேர்வுகள் விண்ணப்பிப்பதில் இருந்தே அரசு பணிகளுக்கு இளைஞர்களிடையே இருக்கும் ஆர்வம் குறித்து நாம் அறிந்துகொள்ள முடியும். 7,382 காலி பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கு டிகிரி படிப்பு மிகவும் முக்கியம் என்பதால் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்களின் குறிக்கோளாக குரூப் 4 தேர்வு உள்ளது. இந்த குரூப் 4 தேர்வுக்கு தகுதி 10-ம் வகுப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குரூப் 4 தேர்வு தொடர்பான காலி பணியிடங்கள், தேர்வு தேதி ஆகிய விவரங்களை அறிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் | 29.03.2022 at 4.30 PM |
குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்க ஆரம்ப நாள் | 30.03.2022 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 28.04.2022 |
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறும் நாள் | 24.07.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnpsc.gov.in |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in tamil |