தமிழ்நாட்டில் போர்வெல் மூலம் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்த ரூ.10,000 கட்டணமா? அதிர்ச்சி தகவல்..!

Advertisement

Ground Water Withdrawal Permission

வீடுகளில் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வரும் அனைவருமே வரும் செப்டம்பர் 30-க்குள் ரூ.10,000 செலுத்தி (CGWA) மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திடம் NOC பெற்றுக்கொள்ளவும் இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதை பற்றின தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

உங்கள் வீட்டில் போர்வெல் இருக்குதா? இதை செய்யாவிட்டால் நடவடிக்கை!

இந்தியாவில் தற்பொழுது நிலத்தடி நீரை பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானோர் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் பதிவு செய்யாமல் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிலத்தடி நீரை பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் இனி நிலத்தடி நீரை புதிதாக எடுப்பவர்களுக்கு கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து மத்திய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் நீச்சல் குளம், சுரங்க திட்டங்கள், உட்கட்ட அமைப்பு, இண்டஸ்டைரியில், மொத்த சப்ளை ஏஜென்சிகள், குரூப் ஹவுசிங் சொசைடிகள், குடியிருப்பு அபார்ட்மென்ட்களுக்கான குடிநீர் மற்றும் வீட்டு பயன்பாட்டு உள்ளிட்ட அனைத்து நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்தில் இருந்து நிலத்தடி நீரை எடுப்பதற்கான அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிலத்தடி நீர் கட்டணம் தொகை எவ்வளவு?

ஆகவே நிலத்தடி நீரை பயன்படுத்திப்பவர்கள் ரூபாய் 10,000 பதிவு கட்டணம் செலுத்தி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நிலத்தடிநீர் எடுப்பதற்காக அனுமதியை பெற்று கொள்ள பயனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதாகவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடவடிக்கை முறை எப்படி இருக்கும்?

நிலத்தடி நீரை மத்திய நிலத்தடி நீரை ஆணையத்திடம் அனுமதி பெறாமல் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருந்தால். அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதிவு செய்யாமல் நிலத்தடி நீர் எடுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.

ஆகவே நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்கள் இதுகுறித்த முழுமையான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள https://www.cgwa-noc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம்.

செய்தி தாள் அறிவிப்பு 👉 Click Here

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement