அடுத்த 3 நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

Advertisement

தமிழ்நாட்டில் மழை பெய்யுமா?

வணக்கம் மக்களே..! கடந்த சில நாட்களாக பெய்ந்த மழையின் தாக்கமே நகர முடியவில்லை. அந்த மழையில் ஈரம் கூட காயாத நிலையில் தமிழகத்தை நோக்கி இன்னும் 3 நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

மழையின் தீவிரம்:

சில நாட்களுக்கு முன்னதாக வரும் 16 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அந்தமான் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற 20 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

தற்போது அதாவது இன்றைய தினம் காற்றழுத்ததாழ்வு பகுதியானது அதாவது அந்தமான் பகுதியில் நிலவக்கூடிய வளிமண்டல சுழற்றி என்பது அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாற வாய்ப்பு இருப்பதாகவும், தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது நிலைகொண்டு இருக்கின்ற நிலையில் படிப்படியாக வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக வருகிற 20 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுசேரி பகுதியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவலை தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மழைபெய்ந்து வந்தது. அது ஆழ்ந்த காற்றழுத்த பகுதியில் காரணமாக மழை பெய்ந்தது.

தற்போது இந்த காற்றழுத்த பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மழை பெய்யும் எனவும் அதனை விட கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  மழை நீரை குடிக்கலாமா? அப்படி குடித்தால் இதெல்லாம் வருமா..? வாங்க தெரிந்துகொள்ளலாம்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement