வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இனி ATM -ல் இப்படி கூட பணம் எடுக்கலாமா..? இது இன்னும் சூப்பரா இருக்கே..!

Updated On: June 7, 2023 5:52 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Bank Of Baroda New Cardless Withdrawal in Tamil

வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நம் அனைவரிடமும் ATM கார்டு கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் முன்பெல்லாம் பணம் அனுப்புவதாக இருந்தாலும் சரி, எடுப்பதாக இருந்தாலும் சரி வங்கிக்கு தான் செல்வோம். ஆனால் இப்போது அப்படியில்லை. அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதனால் இருந்த இடத்தில் இருந்தே வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை பரிவர்த்தனை செய்து கொள்கின்றோம். அதுபோல பணம் எடுப்பதாக இருந்தால் வங்கிக்கு சென்று பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது ATM கார்டை பயன்படுத்தி பணம் எடுத்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது ஒரு புதிய விதியை வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது. அது எந்த வங்கி, எந்த விதியை அமல்படுத்தி உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl

ATM இல் பணம் எடுக்க புதிய விதி அறிமுகம்..!

Bank Of Baroda New Cardless Withdrawal

அதாவது வங்கியின் ATM -களில் இருந்து UPI பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க அனுமதிக்கும் Interoperable Cardless Cash Withdrawal (ICCW) என்ற புதிய சேவையை பாங்க் ஆஃப் பரோடா திங்கள் கிழமை அன்று அறிமுகம் செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த சேவையை அறிமுகப்படுத்திய முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமையை பேங்க் ஆஃப் பரோடா பெற்றுள்ளது. இந்த வசதி பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கிடையாது.

Bank Of Baroda New Cardless Withdrawal

BHIM UPI, பாப் வேர்ல்ட் UPI அல்லது ICCW க்காக இயக்கப்பட்ட வேறு ஏதேனும் UPI அப்ளிகேஷனை தங்கள் மொபைல் ஃபோன்களில் பயன்படுத்தும், பிற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தாமல் பாங்க் ஆப் பரோடா ATM -களில் இருந்து பணத்தை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

Google எடுத்த அதிரடி முடிவு.. டிஜிட்டல் லோன் ஆப்களுக்கு செக் வைத்தது ஏன்

மேலும் பாங்க் ஆப் பரோடா ATM -களில் இருந்து பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் இனி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. 

Bank Of Baroda New Cardless Withdrawal

அதுபோல இந்த முறையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2 பரிவர்த்தனைகளை மட்டுமே செய்ய முடியும். மேலும் ஒரு பரிவர்த்தனைக்கு 5,000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இந்த அம்சமானது இப்போது இந்தியா முழுவதும் உள்ள பேங்க் ஆப் பரோடா பயனர்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. அதுபோல இந்த அம்சம் விரைவில் அனைத்து ATM மையங்களிலும் பயன்படுத்த கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களின் வாட்ஸப்பிற்கு ஆபத்து.. இதை மட்டும் செய்யாதீர்கள்

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now