அரசு பள்ளி மாணவர்கள் இனி பள்ளியிலேயே ஆதார் கார்டு Apply பண்ணலாம்!
தொடர்ந்து பலவிதமான சலுகைகள் கிடைக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒரு புத்தம் புதிய அப்டேட். அது எதனை பற்றியதென்றால் ஆதார் கார்டு பற்றி தான். தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவித்துள்ளது, அது எதனை பற்றியது அதனால் நமக்கு என்ன பயன் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் முழுவதுமாக பார்க்க போகின்றோம். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் இருக்கின்றது, இந்த பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் மேல் ஆண், பெண் பிள்ளைகள் படித்து வருகின்றார்கள்.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த, அரசு நிறைய விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது, அதில் ஒன்று தான் இந்த அரசு பள்ளிகளிலே ஆதார் கார்டு அப்ளை செய்வதாகும். இந்த பதிவை முழுவதுமாக பார்த்து உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் share பண்ணுங்க.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25 (முழு விவரங்கள்)
பள்ளிகளில் ஆதார் கார்டு
Government school students can now apply Aadhaar card at school
பிப்ரவரி 23, முதல் அரசு பள்ளிகளில் ஆதார் கார்டு இல்லாத மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் கார்டு அப்ளை மற்றும் திருத்தும் செய்து தரப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இந்த திட்டத்தை அமைச்சர் இன்று கோவையில் தொடங்கி வைக்கிறார்.
பள்ளிகளில் ஆதார் கார்டு வழங்குவதன் நோக்கம்
இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதென்றால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் வழங்கும் திட்டம் அனைத்தும் அவர்களிடத்தில் போய் சேர்வதற்காகத்தான். ஏனென்றால் இப்பொழுது அரசு வழங்கும் அனைத்து திட்டங்களுக்கும் Aadhaar Card என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
அரசு பள்ளியில் படிக்கும் நிறைய மாணவர்களுக்கு Aadhaar Card என்பது இல்லாமல் இருக்கின்றது, இதனால் அவர்களுக்கு அரசு நிதியுதவிகள் கிடைக்க தாமதமாகிறது. ஒவ்வொரு முறை Aadhaar Card பிழை திருத்த அவர்கள் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது, அதனால் இனி அவர்கள் தனது பள்ளிகளிலேயே இனி Aadhaar Card மிக எளிதாக அப்ளை மற்றும் திருத்தும் செய்துகொள்ளலாம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |