ONEPLUS 12R போனை மார்ச்-16க்குள் திருப்பி கொடுத்தால் பணம்

Advertisement

Oneplus Refund Time March 16 in Tamil

பொதுவாக இன்றைய காலத்தில் எல்லாரும் ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். ஒரு வீட்டில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் 5 பேர்களும் ஒவ்வொரு விதமான ஸ்மார்ட் போனை பயன்படுத்துகிறார்கள். போன் வாங்கிய புதிதில் நன்றாக இருக்கும், நாளடைவில் போனில் பிரச்சனைகள் வரும், அதனை சரி செய்து கொள்ளலாம். ஆனால் ONEPLUS 12R போனிலிருந்து complaint வந்த வண்ணம் இருக்கிறது. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் நிறுவனம் அறிவிப்பை அறிவித்திருக்கிறது. அது என்னவென்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்வோம் வாங்க..

மார்ச் 16-குள் திருப்பி கொடுத்தால் பணம்:

OnePlus 12R வெளியீட்டின் போது ஸ்மார்ட்போனில் ஒரு தவறு நடந்து விட்டது, அதாவது  OnePlus 12R மொபைலின் 256 ஜிபி சேமிப்பக வேரியண்டிற்கான UFS 4.0 சேமிப்பகத்தை பிராண்ட் முதலில் அறிவித்தது. ஆனால் Oneplus பிரசிடென்ட் மற்றும் CEO, கிண்டர் லியு, இந்த போனின் இரண்டு வகைகளும் யுஎஃப்எஸ் 3.0ஐ மட்டுமே ஆதரிக்கின்றன என்று பின்னர் தெளிவுபடுத்தினர். இதனால் OnePlus 12R 256 GB மாடலை வாங்கியவர்களுக்கு ஒன்ப்ளஸ் நிறுவனம் முழுப் பணத்தையும்த் திரும்பத் தருகிறது.

மேலும் இந்த மாடல் போனில் UFS 4.0 பதிலாக UFS 3.1 பொருத்தப்பட்டுள்ளது என்பதை நிறுவனம் ஒப்பு கொண்டது. இந்த செல்போனின் பயன்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாகவே இந்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அதாவது நீங்கள் Oneplus போன் வைத்திருந்தால் 16.03.2024 அன்றுக்குள் கொடுத்தால் உங்களுடைய முழு பணத்தையும் பெற்று கொள்ளலாம் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

உங்களுக்கு  OnePlus 12R 256GB மாறுபாடு UFS 4.0-க்கு பதிலாக UFS 3.1 கொண்டிருப்பது பிடிக்கவில்லை என்றால், மார்ச் 16 ஆம் தேதிக்குள் மொபைலைத் திருப்பிக் கொடுத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம். இதற்கு Oneplus வாடிக்கையாளரை சேவையை தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பணத்தை திரும்ப பெறலாம்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement