PM Kisan 16-வது தவணை வரவில்லை என்றால் என்ன செய்வது..

Advertisement

PM Kisan Installment in Tamil Amount

பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடா வருடம் ரூ.6,000/- நிதி உதவி இத்திட்டத்தில் பெறலாம். அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இத்திட்டத்தில் ரூ.2000/-வீதம் விவசாயிகள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படும். இத்திட்டம் சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது.

இதுவரை 15 தவணைகள் கொடுக்கப்பட்டுள்ளது, அடுத்த தவணைக்காக அனைவரும் வெயிட் செய்து கொண்டிருப்பார்கள். 16-வது என்னைக்கு என்று அறிவித்துள்ளது. அதனை பற்றி இந்த  அறிந்து கொள்வோம் வாங்க..

எப்போது வெளியிட்டது:

PM கிஷான் திட்டத்தில் 16-வது தவணையை நேற்று  28 பிப்ரவரி 2024 அன்று வெளியிட்டது. முந்தைய தவணை நவம்பரில் செலுத்தப்பட்டது, மேலும் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் பணம் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

இந்த 16-வது தவணையில் 2000 ரூபாய் பரிமாற்றம் செய்யப்படும்  கூறியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் 21000 கோடி ரூபாய் மாற்றப்படும். இதுவரை 11 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 3 லட்சத்திற்கும் அதிகமாக ஏற்றப்பட்டுள்ளது.

16-வது தவணை எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

புதிய விவசாயி பதிவு என்பதைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை நிரப்பவும் இப்போது விவரங்களை உள்ளிட்டு ‘ஆம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பிஎம் கிசான் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்ட தகவலைப் பூர்த்தி செய்து, அதைச் சேமித்து, எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

16-வது தவணை வரவில்லை என்றால் என்ன செய்வது:

PM கிசான் யோஜனா தொகை உங்கள் கணக்கிற்கு வரவில்லை என்றால், முதலில் உங்கள் விண்ணப்ப நிலையைச் சரிபார்க்க வேண்டும். இ-கேஒய்சி முடித்து நிலப் பதிவேடுகளைச் சரிபார்த்த பிறகும் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை என்றால், ஹெல்ப்லைன் எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

16வது தவணையின் கீழ் உங்கள் கணக்கில் ரூ.2,000 வரவில்லை என்றால், பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயரை முதலில் சரிபார்க்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் எண் போன்ற தகவல்களை நீங்கள் பூர்த்தி செய்த ஆவணங்கள் சரியானதா எனச் சரிபார்க்கவும். ஏதேனும் தவறு நடந்தாலும், உங்கள் பணம் வரமால் இருக்கலாம்.

pmkisan.gov.in இணைய தளத்துக்குச் செல்லவும்.

முகப்புப் பக்கத்தில் ‘விவசாயிகளின் மூலை’ பிரிவின் கீழ் ‘பயனாளி நிலை’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண்ணை உள்ளிடவும். ‘தரவைப் பெறு’ என்பதைக் கிளிக் செய்தால் அதில் தவணையின் நிலை காட்டப்படும்.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement