TNEB Electricity Complaint App in Tamil
நம்முடைய முன்னோர்களின் காலத்தில் மின்சார வசதி என்பது ஊருக்கு ஒருத்தர் இருக்கும். நம்முடைய தாத்தா பாட்டிகள் எல்லாம் விளக்கு மற்றும் இயற்கையான காற்றின் மூலம் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் மின்சார வசதி இல்லாத வீடுகளே இல்லை. இதில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் EB ஆபிசுக்கு சென்று தான் புகார் கொடுக்க வேண்டியிருக்கும். புகார் மட்டுமில்லை EB சம்மந்தமான எந்த விஷயத்துக்கும் அலுவலகத்திற்கு செல்லும் நிலை இருந்தது. இதில் தற்போது வசதி வந்துள்ளது.அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
Electricity Complaint App
தமிழ்நாடு முழுவதம் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மின்சாரம் வழங்கி வருகின்றது. மேலும் இதில் மின்தடை, மீட்டர் பழுது போன்ற பிரச்சனைகளையும் பார்த்து அதற்கான தீர்வையும் காண்கின்றது.
இதுவரை மக்கள் அனைவரும் EB சம்மந்தமான எந்த விஷயத்துக்கும் நேரில் சென்று புகார் அளிப்பதாக இருந்தது. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் ஒரு ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப் மூலம் மின்சார வாரியம் சம்மந்தமான எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வை காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக மின்சார கட்டணம், புதிய மின்சார இணைப்பு, ஏற்கனவே இருக்கும் மின் இணைப்பின் பெயரை மாற்றுவது, தர்காலிக மின் இணைப்பு, விவசாய மின் இணைப்பு போன்ற சேவைகளை இந்த ஆப் மூலம் பயன் அடைந்து கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிப்பது, அதற்கான தொகையை செலுத்துவது மட்டுமன்றி நமது விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25 (முழு விவரங்கள்)
புகாருக்கான தீர்வு:
புகார் கொடுத்த 2 மணி நேரத்திற்குள் மின்தடை தொடர்பான புகார்களை சரி செய்ய வேண்டும். மின்சார வயர்கள் தொடர்பான பிரச்னைகளை குறைந்தது 5 மணி நேரத்திற்குள்ளாக சசெய்திருக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர் பிரச்னைகளை 10 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும்.
புதிய மின்சார இணைப்புகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டால் குறைந்தது 24 மணி நேரத்தில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |