வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்கள் முக்கியம் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

Voter Id Aadhaar Link News in Tamil

நண்பர்களே அனைவருமே ஒட்டு போடுவீர்கள் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அனைவருக்கும் 18 வயது நிரம்பி இருக்காது. 18 வயது முடித்தவர்களுக்கு மட்டும் தான் இந்த வாக்காளர் அட்டை இருக்கும். இந்த அடையாள அட்டை என்பது ஒரு அடையாள ஆவணம் ஆகும். இது எந்த இடத்திற்கு முக்கியமாக தேவைப்படுகிறது என்றால் அது வாக்களிப்பதற்கு முக்கியமாக தேவைப்படுகிறது.

தனி மனிதனின் ஆதாரமாக ஆதார் அட்டை இருந்தாலும், ஒட்டு போடுவதற்கு முக்கியமாக வாக்காளர் அட்டை அவசியம் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது எதனால் இணைக்கப்படவேண்டும், இதற்கு காலக்கெடு உள்ளதா என்று பார்க்கலாம் வாங்க..!

Voter Id Aadhaar Link News in Tamil:

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படவேண்டும். அப்படி இணைக்கவில்லை என்றால் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூ தெரிவித்துள்ளார்.

எதனால் வாக்காளர் அட்டையுடன் ஏன் ஆதார் அட்டை இணைக்கவேண்டும் என்றால் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட குழப்பங்களை கலைப்பதற்காக வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதனை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டு, வீடு வீடாக அதிகாரிகள் சென்று பெயர் எண்களை பதிவு செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் போன் மூலம் கூட வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்கப்பட்டு வருகிறது.

பான், ஆதார் வைத்திருப்பவர்கள் இதை முக்கியம் தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது.

 இந்த வாக்காளர் அட்டை, ஆதார் எண் இணைக்கும் பணி மார்ச் 30 தேதி வரை செயல்படும் என்றும், அதன் பின்பு இணைக்காத பெயர்களை வாக்காளர் அட்டையிலிருந்து நீக்கப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இதுவரை காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

மத்திய அரசு அறிவிப்பு  ஆதார் மற்றும் பான் இல்லாமல் சேமிப்பு கணக்கை திறக்க முடியாது

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement