அப்டேட்னா இப்படி இருக்கணும்..! வாட்சப் பயனர்களே உங்களுக்கு தான் இந்த அப்டேட் தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Whatsapp To New Update Username in Tamil

ஹலோ நண்பர்களே..! உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா..? நாம் கேட்ட கேள்வி தப்பு என்று நினைக்கின்றேன். ஏனென்றால், நாம் வாழும் இன்றைய உலகம் ஸ்மார்ட் போனில் மூழ்கி இருக்கிறது. இன்றைய நிலையில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளுக்கு கூட ஸ்மார்ட் போனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்திருக்கிறது. அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனை செயலிகள் இருந்தாலும் மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்துவது வாட்சப் தான். அப்படி வாட்சப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அது என்ன என்று படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்சப் பயனர்களுக்கு வந்திருக்கும் புதிய அப்டேட்..!

whatsapp to new update details in tamilபொதுவாக வாட்சப் நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் வாட்சப்பில் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை வழங்கியது.

அதுபோல டெலெக்ராமில் கிடைக்கும் பல அம்சங்களை வாட்ஸ்அப் இப்போது அதன் தளத்தில் அறிமுகப்படுத்தி  வருகிறது. இதனை தொடர்ந்து வாட்சப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை அறிமுக செய்யப்போகிறது.

 மெட்டா நிறுவனம் கூறியுள்ள தகவலின் படி இனி WhatsApp பயன்படுத்த மொபைல் நம்பர் தேவையில்லை என்று கூறியுள்ளது. அதாவது வாட்சப் பயன்படுத்தும் அனைவரும் மொபைல் நம்பர் உதவியில்லாமல் பயனர் பெயரைப் பயன்படுத்தும் வகையிலான வசதியை அறிமுகப்படுத்த போவதாக வாட்சப் நிறுவனம் கூறியுள்ளது. 
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற போறீங்களா.. அப்போ ஜூன் மாத வங்கி விடுமுறை நாட்களை தெரிஞ்சிக்கோங்க

whatsapp to new update details in tamil

இந்த புதிய அம்சத்தை வாட்சப் அமைப்பில் Menu மூலம் அணுக முடியும். மேலும் சுயவிவரப் பிரிவில் பயனர் பெயரை தேர்ந்தெடுப்பதன் மூலம் வாட்சப்பில் மற்றவருக்கு மெஸேஜ் செய்யும் போது தொலைபேசி எண்களை மட்டும் நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்த அம்சத்தை பயன்படுத்தி ஒரு தனித்துவமான மற்றும் எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய பயனர் பெயரை உருவாக்கி வாட்சப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பயனர்கள் தொலைபேசி எண் இல்லாமல், தேர்ந்தெடுத்தவர்களின் பெயரை பயன்படுத்தி மற்றவர்களுடன் வாட்சப்பில் Chat செய்யலாம்.

குறிப்பு: மேலும் வாட்சப்பில் பயனர்களின் பெயர்கள் எப்படி செயல்படும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் பயனர்களின் பெயர்கள் மூலம் தொடங்கப்படும் உரையாடல்கள் பயன்பாட்டின் புகழ்பெற்ற End-to-End Encryption மூலம் பாதுகாப்பாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

👉 கடைகளில் பொருட்கள் வாங்க போகிறீர்களா.. அப்போ மத்திய அரசின் இந்த அறிவிப்பை தெரிந்துக்கொள்ளுங்கள்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement