வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வைரமுத்து கவிதைகள் | Vairamuthu Kavithaigal

Updated On: February 17, 2025 7:07 PM
Follow Us:
Vairamuthu Kavithaigal 2
---Advertisement---
Advertisement

வைரமுத்து கவிதைகள் வரிகள்

கவிதை என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதனை படிக்கவும், எழுதவும் பலரும் விரும்புகின்றோம். கவிதையில் பலவகையான வகைகள் இருக்கிறது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை இது போன்று உறவு முறைகளை பற்றி நம் மனதில் உள்ளதை கவிதையாக எழுதலாம். இதுமட்டும் இல்லாமல் மலை, கடல், அதிகாலையில் உதிக்கும் சூரியன், நீல வானம் இது போன்ற இயற்கை குறித்து நம் மனதில் உள்ளதை கவிதையாக எழுதலாம். ஆகவே நமது மனதில் தோன்றும் விஷயங்கள் நாம் கவிதை வரிகள் மூலம் வெளிப்படுத்துகின்றோம். சரி இந்த பதிவில் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதை வரிகளை இந்த தொகுப்பில் நாம் படிக்கலாமா.

வைரமுத்து:

வைரமுத்து கவிதைகள்

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

Vairamuthu Kavithaigal:

பல் முளைக்கையில்
ஈறு வலிக்கும்..
மாற்றம் முளைக்கையில்
வாழ்க்கை வலிக்கும்..
வலியெடுத்தால்
வழி பிறக்கும்..
வழி பிறந்தும்
வலியிருக்கும்..
-வைரமுத்து.

வைரமுத்து கவிதைகள்:

வைரமுத்து கவிதைகள்

புகழின் பின்னால்
நீ போனால்
அது பொய்மான்
உன் பின்னால்
புகழ் வந்தால்
அது நிஜமான்
அப்போது தான்
நீ அதற்கு எஜமான்.
-வைரமுத்து

Vairamuthu Kavithaigal:

மேடையிலொருவன் பொய்குரைப்பான்
தாவி மேடையேறித்
தலையிற்குட்ட முடியவில்லை

சூரிய நிலாக்களாய்க்
கண்ணுக்கழகிய பெண்கள்
கடந்தேகும் போதெல்லாம்
அழகி நீங்களென
வாயாரச் சொல்ல வலிமையில்லை

தண்ணீரே எண்ணெயாய்த்
தாமரைகள் விளக்கெரிக்கும்
குளம்கண்டால்
ஓருடையும் களையாமல் ஓடிக்குதித்து
நீர் குடைந்தாட நேரமில்லை

நீண்டுகிடக்கும் நெடுஞ்சாலையில்
வேப்பமரம் விரித்த நிழற்பாயில்
துண்டு தலைக்கு வைத்துத்
துயில் கொள்ள இயலவில்லை
நீர்வழிப்படூஉம் புணைபோல் நானும்
நதிவழிப்பாட்டுக் கடலடையக்கூடவில்லை

ரயிலில் வரும் சில வியாபாரிகள்
எட்டுக்கட்டையில் இலக்கியம் பேசுகையில்
அபாயச்சங்கிலி பிடித்திழுக்கும்
ஆண்மையின்னும் கூடவில்லை

கடன்கேட்கப் போனவீட்டில்
உப்புக்கரிக்கும் உணவைத்
துப்பித் தொலைக்கத் துணிவில்லை

சிலரது மரணத்தை
தேசிய லாபமென்று
அறிக்கையிடத் திராணியில்லை

முதலமைச்சர் வேலைகோரி
முதலமைச்சருக்கே சொல்லச்சொல்லும்
மூடப்பரிந்துரை மூட்டைகளை
முகத்தில் விசிறியடிக்க முடியவில்லை

தேசியகீதம் இசைக்கும் நேரம்
பிளிறும்-கனைக்கும்-பேசும்-நகரும் பிராணிகளை
வண்டலூர் அனுப்ப வசதியில்லை

இனிப்பு-ஊறுகாய்-நெய்யெல்லாம்
மூக்கோடு முடிகின்றன
நாற்பது வயதானால் நாவுக்கு உரிமையில்லை

எண்ணெய்க்குளியலின் பிற்பகல் தூக்கத்தை
வைத்தியர் சட்டம் வழங்கவில்லை

எழுத மை வேண்டும்
வானத்தின் நீலத்தில்
சில குடங்கள் கேட்டேன்
மசியவில்லை

வான்குடைய வேண்டும்
சிட்டுக் குருவிகளின் சிறகுகளைக்
கடன் கேட்டேன்

தரமாட்டான் மனிதனென்று தரவில்லை

கற்றை மேகமாய்க் காடுகடக்க
ஒற்றைத் தேன்துளியாய்ப் பூவுள்உருள
நீண்ட கனவு… நிறைவேறவில்லை

குறைந்தபட்சம்
ஞாயிறு மட்டுமேனும்
எட்டுமணித் தூக்கம் இயலவில்லை

பழைய பெரியவரே
பாலகங்காதர திலக்!
சுதந்திரம் எனது பிறப்புரிமையென்பது
சும்மா.

வைரமுத்து கவிதை வரிகள்

Vairamuthu Kavithaigal

விடியல்
மலச்சிக்கலின்றி தொடங்கி
இரவு மனச்சிக்கலின்றி
முடிந்தால் நீங்கள்
ஆரோக்கியமாய்
வாழ்கிறீர்களென்று
பொருள்.
-வைரமுத்து

வைரமுத்து தத்துவம்:

Vairamuthu Kavithaigal

விடியாத இரவென்று
எதுவுமில்லை..
முடியாத துயரென்று
எதுவுமில்லை..
வடியாத வெள்ளமென்று
எதுவுமில்லை..
வாழாத வாழ்க்கையென்று
எதுவுமில்லை..
-வைரமுத்து

வைரமுத்து கவிதைகள் இயற்கை:

இந்த
நீள
நீலக் கரும்பலகையில்
எழுதும்
இவை
மௌன பாஷையின்
லிபிகளோ?

நிலவு என்னும்
ஒற்றை வாக்கியக் காவியத்தை
எழுதி முடித்த
எக்காளத்தில் . . .
எவனவன்
இத்தனை முற்றுப் புள்ளிகள்
இட்டு வைத்தவன்?

வைரமுத்து கவிதைகள் நட்பு:

“நட்பு என்பது
சூரியன் போல்
எல்லா நாளும்
பூரணமாய் இருக்கும்

நட்பு என்பது
கடல் அலை போல்
என்றும்
ஓயாமல் அலைந்து வரும்

நட்பு என்பது
அக்னி போல்
எல்லா மாசுகளையும்
அழித்து விடும்

நட்பு என்பது
தண்ணீர் போல்
எதில் ஊற்றினாலும்
ஓரே மட்டமாய் இருக்கும்

நட்பு என்பது
நிலம் போல்
எல்லாவற்றையும் பொறுமையாய்
தாங்கிக் கொள்ளும்

நட்பு என்பது
காற்றைப் போல்
எல்லா இடத்திலும்
நிறைந்து இருக்கும்

ஆசிரியர் கவிதை வைரமுத்து:

மண்ணில் மனிதரை வடிப்பது கல்வி,
மனிதனை மனிதனாக வடிப்பது ஆசிரியர்!”

வைரமுத்து ஹைக்கூ கவிதைகள்:

சுடும் வரை நெருப்பு

சுற்றும் வரை உலகம்

போராடும் வரை மனிதன்

தமிழ் மொழி பற்றிய கவிதை
கண்ணதாசன் கவிதைகள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now