Miss You Amma Quotes in Tamil
இந்த உலகில் பிறந்த அத்தனை உயிர்க்கும் தாய் என்பவள் உண்டு. அந்த தாய்க்கு ஈடாக வேறு எவரும் குழந்தையை கவனித்துவிட்டு முடியாது. குழந்தைகள் விடும் மூச்சிலேயே உடல்நிலையை கணித்துவிடும் மருத்துவர் தாய். பள்ளிக்கு போகாமலேயே வாழ்க்கையின் பாடங்கள் கற்றுத்தரும் ஆசிரியை. அவள் இல்லாத இந்த உலகம் நரகமாக தான் இருக்கும். அதனால் இந்த பதிவில் அம்மாவை நினைத்து ஏங்கும் கவிதை வரிகளை தெரிந்து கொள்வோம்.
மிஸ் யூ அம்மா கவிதை வரிகள்:
அன்று என் அழுகை சத்தம் கேட்டு சிரித்தவளே
இன்று அழுகிறேன் சிரிப்பதற்கு நீ இல்லையென்று

Miss you Amma Kavithai:
நீ இல்லை என்றால் நானும் இல்லை
ஆனால் நீ இல்லா உலகில் மட்டும் தவிக்க விட்டு சென்றாயே அம்மா

Miss you Amma Kavithai in Tamil:
அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள் தொலைந்து போன பின் தேடாதே
அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அம்மாவின் அன்பு

Amma Missing Kavithai in Tamil:
தந்தை தோழனாகி போனார்
தமையன் தனபங்காளன் ஆகிவிட்டான்
தமக்கை மாற்றான் மல்லிகை ஆகிவிட்டாள்
கணவனோ என் குழந்தையின் தந்தை ஆகிவிட்டான்
குழந்தையோ மாற்றான் கொடியில் படர்ந்துவிட்டது
தாயே நீ,
கண்டிக்கும் தந்தை ஆனாய்
பாதுகாக்கும் தமையன் ஆனாய்
பகிரும் தமக்கை ஆனாய்
வடிவமைக்கும் துணைவன் ஆனாய்
மடிதவழும் குழந்தை ஆனாய்
ஆயினும் என்னுள் தாயாகவே அமர்ந்திருக்கிறாய்
Amma Missing Quotes in Tamil:
மறக்க முடியாத நினைவு நீ
இழக்க கூடாத உறவு நீ

மிஸ் யூ அம்மா கவிதை:
நீ இல்லாத வாழ்க்கை வாழ்க்கையாக நான் அறியேன்..உன் பாசத்தின் மிச்சம் இன்னும் என் நினைவுகளில் இருப்பதால் நானும் உயிர் வாழ்கிறேன்..!

மிஸ் யூ அம்மா கவிதை:
உன் புன்னகை ஒன்றே என்னை வாழவைத்துக்கொண்டிருக்கிறது..உன் இழப்பை மறக்கமுடியாத மகனாக என் இதயத்தில் உன்னை சுமந்து திரிகிறேன் அம்மா…

Miss u Amma Quotes in Tamil:
அம்மா இல்லாத உலகம், நிலா இல்லா இரவு போல
உன் மடியில் தலை வைத்து உறங்க முடியாத காலம், நெஞ்சை புண்படுத்தும் அம்மா
உன் கை பற்றிப் பயணிக்க முடியாத இந்த வாழ்க்கை, காலடியில் முட்களாக உணரப்படுகிறது
உன் குரல் கேட்டாலே எவ்வளவு நிம்மதி அம்மா… இப்போது அந்த இனிமை மட்டும் இல்லாமல் போனது
நீ என்னுடன் இருந்த காலம் சொர்க்கம், நீ இல்லாத இப்போதைய நேரம் வெறும் இருள்
Amma Missing Quotes in Tamil:
அன்று என் அழுகை சத்தம் கேட்டு சிரித்தவளே !
இன்றும் நான் அழுகிறேன் சிரிப்பதற்கு நீ இல்லையென்று…
நீ இல்லையென்றால் நானும் இல்லை
ஆனால் நீ இல்லா உலகில் மட்டும்
தவிக்க விட்டு சென்றாயே அம்மா
| இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |














