இனி சப்பாத்திக்கு மாவு பிசைந்து கஷ்டப்பட தேவையில்லை… !

Advertisement

    Chapati  Recipe in Tamil

வணக்கம் நண்பர்களே… சப்பாத்தி என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக இருந்தாலும் சப்பாத்தியை செய்து முடிப்பது கடினமான வேலையாக உள்ளது. இன்றைய காலத்தில்  பலருக்கும் பல வகையான நோய்கள் வருகிறது. இன்று பலருக்கும் உடல் எடை அதிகரிப்பு மற்றும் பல நோய்கள் வருகிறது. அதற்கு மருத்துவர்கள் முதலில் சொல்வது சப்பாத்தி மற்றும்  கோதுமை போன்ற உணவுகளை சாப்பிட்டுவருவது நல்லது என்று கூறுகிறார்கள். ஆனால் நம் சப்பாத்தி  பிசைவதை  எண்ணி சப்பாத்தி செய்வதை குறைத்து வருகிறோம். அதனால் சுலபமாக சப்பாத்தி செய்வதை பற்றி இந்த பதிவில் பார்த்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்: 

  • கோதுமை மாவு – 1 கப் 
  • தேவைப்பட்டால் மைதா மாவு – 1 கப் 
  • சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் 
  • உப்பு – சிறிதளவு
  • தண்ணீர்-  தேவையான அளவு
  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

சப்பாத்தி மாவு பிசையாமல் எளிமையான செய்முறை :

ஸ்டெப் :1

chapati-and-kurma-recipe-in-tamil.png

முதலில் ஒரு பவுலை எடுத்து கொள்ளவும். அதில் 1 கப் கோதுமை மாவு மற்றும் 1 கப்  மைதா மாவு சேர்க்க வேண்டும். விருப்பம் இல்லாதவர்கள் மைதா மாவு சேர்க்க அவசியம் இல்லை.

அடுத்ததாக  1 ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து எல்லா பொருட்களும் சேரும் வரை கலக்கி விட்டு, தண்ணீரை ஊற்றி கெட்டி படாத அளவிற்கு மாவை கரைக்க வேண்டும். இதனை தோசை மாவு பதம்  வந்தவுடன், 1 டீஸ்பூன்  எண்ணெயை சேர்த்து கலக்கவும்.

வீட்டில் சப்பாத்தி செய்யும் போது சப்பாத்தியை எண்ணக்கூடாதாம்..! ஏன் தெரியுமா..?

ஸ்டெப் :2

how-to-make-soft-chapati-with-oil-in-tamil.png

தோசை தவாவை எடுத்து கொள்ள வேண்டும். கலந்து வைத்த சப்பாத்தி மாவை ஊற்றும் போது அடுப்பை குறைத்து விடவும். மாவை  ஊற்றிய பிறகு அடுப்பை அதிகமாக வைத்து கொள்ளலாம். தோசை வடிவத்தில் மாவினை ஊற்ற வேண்டும். பிறகு  ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் போது தோசையை திருப்பி போடவும்.

ஸ்டெப் : 3 

சப்பாத்தி செய்வது எப்படி

தோசையின் மேல் பகுதி பொன்னிறமாக மாறும். அப்போது தோசையின் மேல் ஒரு கரண்டியை  வைத்து லேசாக அழுத்தி விடவும். சப்பாத்தி பெரியதாகவும், மிருதுவாகவும் வரும். அப்போது சிறிதளவு  எண்ணெயை மேலே தடவி விட்டால் ருசியான சப்பாத்தி ரெடி.

வெஜிடபிள் குருமா :

 chapathi kurma recipe in tamil

தேவையான பொருட்கள் : 

  • கேரட் – 50 கிராம்
  • பீன்ஸ் –50 கிராம் 
  • உருளைக்கிழங்கு – 100 கிராம்
  • பீட்ரூட் – 100 கிராம் 
  • வெங்காயம் – சிறிதளவு
  • இஞ்சி, பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
  • தக்காளி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • தனியா தூள்- 3 டேபிள் ஸ்பூன்
  • அரைத்த தேங்காய் – 1/4 கப்
  • எண்ணெய் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • தயிர் – 1/2 கப்  

செய்முறை : 

ஸ்டெப் : 1 

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அதில்  எண்ணெய் சூடான பின்பு, சோம்பு கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்பு  இஞ்சி பூண்டு விழுதை போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்ததாக  தக்காளி, பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ் , பீட்ருட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை சேர்த்து வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் இல்லாமல் சுவையான குருமா செய்யலாம்.!

ஸ்டெப்  :2   

புளிப்பிற்கு 5 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் இந்த மூன்று மசாலாவை நன்றாக வதக்கவும். பிறகு அதனுடன் தண்ணீரை  ஊற்றி நன்றாக கிளறி விட்ட பின்பு குருமாவை நன்றாக கொதிக்க விடவும்.

ஸ்டெப் : 3 

கடைசியாக தேங்காய் பாலை ஊற்றி, அதனுடன் புளி தண்ணீரை விட்டு,  மிளகு தூளை போட்டு கலக்கவும். வாசனைக்கு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை போட்டு இறக்கினால் சுவையான வெஜிடபிள் குருமா ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement