கிராமத்து சுவையில் கசப்பே தெரியாத பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு….

Advertisement

சுண்டக்காய் காரக்குழம்பு 

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய சமையல் பதிவில் செட்டிநாடு காரக்குழம்பு சுவையாக செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக காரக்குழம்பு என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் உடலுக்கு அதிக பயன்தரக்கூடிய சுண்டைக்காயில் காரக்குழம்பு வைத்தால் யாருக்குத்தான் பிடிக்காது. கிராமத்து ஸ்டைலில் எந்த உணவு செய்தாலும் வழக்கமாக சாப்பிடும் அளவை விட அன்றைக்கு அதிகமாகவே சாப்பிடுவோம். எனவே வீடே மணக்கும் அளவிற்கு கிராமத்து சுவையில் சுண்டைக்காய்  காரக்குழம்பு வைப்பது எப்படி என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

சுண்டக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி 

தேவையான பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய் – 1 கப்
சின்ன வெங்காயம் – 1 கப்
தேங்காய் துண்டுகள் – 2
பூண்டு – 2 பல்
கீறிய பச்சை மிளகாய் – 1
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
குழம்பு பொடி – 2 டீஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
வெல்லம் -சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய்
உப்பு – தேவையான அளவு.

காரைக்குடி ஸ்பெஷல் கார அடை இப்படி செய்யுங்க டேஸ்ட் தூக்கலா இருக்கும்..!

செய்முறை:

முதலில் சுண்டைக்காயை காம்பு நீக்கி, கழுவிய பின்னர் மத்தால் லேசாக சுண்டைக்காயை நசுக்கிக் கொள்ள வேண்டும்.

sundakkai kaara kulampu seymurai

பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, கீறிய பச்சை மிளகாய் மற்றும் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

sundakkai kaara kulampu seymurai

உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய ஒரு காரசாரமான கர்நாடக ஸ்பெஷல் ரெசிபி ஜீரா ஆலு….

தேங்காய் நன்கு வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள சுண்டைக்காயை அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.

சுண்டைக்காய் சேர்த்த பின்னர் மிதமான வெப்பத்தில் காயின் பச்சை தன்மை போகும்வரை நன்றாக வதக்கவும்.

sundakkai kaara kulampu seymurai

பிறகு அதில் மஞ்சள்தூள், உப்பு, குழம்பு பொடி போட்டு, புளியைக் கரைத்து ஊற்றி அதனுடன் காரத்திற்கு ஏற்றவாறு மிளகாய்த்தூள் சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது துண்டு வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.

sundakkai kaara kulampu seymurai

கடைசியில் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

இப்போது கிராமத்து சுவையில் சுண்டைக்காய் காரக்குழம்பு ரெடி…

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement