இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க..!

Advertisement

Kadai Mushroom Recipe in Tamil

பொதுவாக நாம் அனைவருக்குமே தினமும் ஒரு புதிய புதிய உணவினை சாப்பிட வேண்டும் அல்லது சுவைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அது உண்மையில் சாத்தியமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் இன்றைய அவசர சூழலில் முதலில் நமக்கு சமைப்பதற்கே நேரம் இல்லை. இந்நிலையில் எவ்வாறு புதிய புதிய உணவுகளை சமைப்பது. அப்படி நாம் சமைத்தாலும் நாம் தினமும் செய்து சுவைக்கின்ற இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றையே தினமும் திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவோம். நமது வேலை பலுவின் காரணமாக இவற்றையே திரும்ப திரும்ப செய்து சுவைத்தாலும் இதன் கூட சேர்த்து சாப்பிடும் சைடிஸ்யாவது கொஞ்சம் மாற்றி சுவைத்து சாப்பிட்டு பார்க்கலாமே. அதனால் தான் இன்றைய பதிவில் இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சுவையான கடாய் காளான் ரெசிபி:

Mushroom masala recipe in tamil

 

மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே சுவையான கடாய் காளான் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம். அதற்கு முன்பு இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. காளான் – 400 கிராம் 
  2. பட்டை – 1
  3. கிராம்பு – 4
  4. ஏலக்காய் – 2
  5. பிரியாணி இலை -1
  6. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன் 
  7. வெங்காயம் – 4
  8. தக்காளி – 4
  9. இஞ்சிபூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன் 
  10. மிளகாய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன் 
  11. மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன் 
  12. சீரக தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  13. மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
  14. குடை மிளகாய் – 1
  15. பச்சை மிளகாய் – 2
  16. கரம் மசாலாத்தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன் 
  17. தண்ணீர் – 1 கப் 
  18. நெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  19. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  20. உப்பு – 1 டேபிள் ஸ்பூன் 

உங்க வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா அப்போ இந்த ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள்

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 வெங்காயம் மற்றும் 4 தக்காளி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்துவிட்டு பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் நாம் நறுக்கி வைத்துள்ள 4 தக்காளியை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

400 கிராம் காளான், 1 வெங்காயம், 1 குடை மிளகாய் மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 1 பட்டை, 4 கிராம்பு, 2 ஏலக்காய், 1 பிரியாணி இலை, 1 டேபிள் ஸ்பூன் சீரகம் மற்றும் நாம் நறுக்கி வைத்துள்ள 3 வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

உங்க வீட்டில் பழங்கள் இருக்கா அப்போ இந்த ரெசிபியை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்கள்

ஸ்டேப் – 4

இவையெல்லாம் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

அது நன்கு வதங்கிய பிறகு 1 டேபிள் ஸ்பூன் உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 2 டேபிள் ஸ்பூன் சீரக தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6

Kadai mushroom masala recipe in tamil

பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள 400 கிராம் காளானை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். அது நன்கு வதங்கிய பிறகு நாம் நறுக்கி வைத்துள்ள 1 வெங்காயம், 1 குடை மிளகாய் மற்றும் 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

பிறகு அதில் 1 கப் தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ளுங்கள். இறுதியாக அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.

இப்பொழுது நமது சுவையான கடாய் காளான் தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த கடாய் காளான் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்கள்.

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement