வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் செய்வது எப்படி..?

Updated On: July 6, 2023 8:05 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

Unniyappam Recipe in Kerala Style  

நாம் நம்முடைய வீட்டில் மாலை நேரங்களில் இனிப்பு மற்றும் கார வகையான ரெசிபிக்களை செய்து சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக அனைவருடைய வீட்டிலும் பணியாரம் மற்றும் குழி பணியாரம் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் ஒரு முறையாவது கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் செய்து சாப்பிட்டு இருக்கீர்களா..? அதனால் இன்றைய ரெசிபி பதிவில் கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் செய்வது எப்படி என்றும் அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று தான் பார்க்கப்போகிறோம். ஆகவே பதிவை தொடர்ந்து படித்து வந்தால் போதும் உண்ணியப்பம் செய்ய தெரியாமல் இருப்பவர்கள் உடனே கற்று கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

கேரளா உண்ணியப்பம்:

கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.

  • வெல்லம்- 300 கிராம் 
  • வாழைப்பழம்- 2 அல்லது 3
  • அரிசி மாவு- 2 கப் 
  • கோதுமை மாவு- 1 கப் 
  • தேங்காய் துருவல்- 1/2 கப் 
  • எள்- 1/2 ஸ்பூன்
  • எண்ணெய்- தேவையான அளவு
  • பேக்கிங் சோடா- 1/2 ஸ்பூன் 
  • உப்பு- 1/4 ஸ்பூன் 

கேரளா ஸ்டைல் டேஸ்டி சிக்கன் ரோஸ்ட்

கேரளா உண்ணியப்பம் செய்வது எப்படி..?

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த தண்ணீருடன் 300 கிராம் வெல்லத்தை அதில் நசுக்கி சேர்த்து கொண்டு வெல்லப் பாகினை தயார் செய்து கொள்ள வேண்டும்.

கேரளா உண்ணியப்பம் செய்வது எப்படி

இப்போது மற்றொரு கடாயில் துருவிய தேங்காய் மற்றும் எள்ளினை சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை வறுத்துக் ஆற வைத்து கொள்ளவும்.

அடுத்த ஒரு மிக்சி ஜாரில் 3 வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக மைய அரைத்து கொள்ளவும். இப்போது அதனுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து மீண்டும் ஒரு முறை பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

அதன் பிறகு ஒரு பவுலில் 2 கப் அரிசி மாவு, 1 கப் கோதுமை மாவு, அரைத்த வாழைப்பழ பேஸ்ட் என அனைத்தினையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை பணியாரம் மாவு வரும் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

5 நிமிடம் கழித்த பிறகு வறுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் எள், 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1/4 ஸ்பூன் சால்ட் உப்பு சேர்த்து அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேருமாறு கையினால் கலந்து 1/2 மணி நேரம் அப்படியே மாவினை வைத்து கொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மிகவும் ருசியான யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல் செய்வது எப்படி 

கடைசியாக அடுப்பை பற்றிய அதில் உண்ணியப்பம் செய்வதற்கான கடாயினை வைத்து கடாய் சூடானதும் அதில் உள்ள குழிகளில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பின்பு தயார் செய்து வைத்துள்ள உண்ணியப்பம் மாவினை ஒரு கரண்டியால் அதில் ஊற்றி கொள்ளுங்கள்.

இப்போது கடாயில் உள்ள உண்ணியப்பம் சிறிது நேரத்திற்குள் ஒரு பக்கம் பொன் நிறமாக வெந்து வந்தவுடன் அதனை மறுபக்கமாக திருப்பி போட்டு வெந்தவுடன் எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் தயார். இதேபோல் மற்ற மாவினையும் செய்து எடுத்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தாங்க கேரளா ஸ்டைல் உண்ணியப்பம் இப்படி தான் செய்யணும். நீங்களும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி டேஸ்ட் எப்படி இருக்குனு பாருங்க.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

aadi 18 special food in tamil

ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க..

sorakkai podimas seivathu eppadi in tamil

குஜராத்தி ஸ்பெஷல் துதி தோக்லி (சுரைக்காய் பொடிமாஸ்) Recipe ….

mutton kabab recipe in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க..

bakrid special mutton biryani in tamil

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

carot payasam

பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

chicken malai tikka recipe in tamil

ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!