BDO Officer Salary in Tamil | Block Development Officer Salary in Tamilnadu
நாம் அனைவரின் மனதிலேயும் பொதுவாக உள்ள ஆசை எது என்றால் அரசு வேலை பெற வேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கு காரணம் நல்ல சம்பளம் மற்றும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தான். ஆனால் என்றாவது அரசு அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்திருக்கிறீர்களா..? அப்படி சிந்தனை செய்தவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அரசு அதிகாரிகளின் சமபளம் எவ்வளவு என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் BDO Officer அதாவது வட்டார வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> ஊரக வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா
BDO Full Form in Tamil:
BDO என்பது Block Development Office விரிவாக்கமாக இருக்கிறது. இதனை தமிழில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்று அழைப்பார்கள்.
BDO Officer Salary Per Month in Tamil:
வட்டார வளர்ச்சி அதிகாரி வேலை என்பது அரசு வேலை விண்ணப்பதாரர்களிடையே மிகவும் பிரபலமான பணியிடங்களில் ஒன்றாகும். பொதுவாக இந்த வட்டார வளர்ச்சி அதிகாரியின் பணி என்னவென்றால் ஊரக வளர்ச்சிப் பணிகளின் மேற்பார்வையாளர்களாக உள்ளனர்.
அதாவது வரிவிதிப்பு செயல்முறை, ஒரு பஞ்சாயத்து ஊழியர்களின் சம்பளம், ஊரக அல்லது மாவட்ட மேம்பாடு, கிராமப்புறங்களில் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பதிவு பராமரிப்பு என பல பொறுப்புகளை கவனிக்க BDO-க்கள் அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.
BDO பணியாளர்களின் சம்பளம் 7வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) படி நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களின் மாத சம்பளம் தோராயமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரைவழங்கப்படுகிறது.இந்த ஊதியம் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் படி வழங்கப்படுகிறது. மற்ற அரசு அதிகாரிகளை போலவே இவர்களுக்கும் பதவி உயர்வு ஓய்வூதியம் கிடைக்கும்.
பதவி உயர்வுகள்:
- BDO (Block Development Officer) ஆரம்பத்தில்
- ஆட்சியர் (Deputy Collector) பல ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பிறகு
- மாவட்ட ஆட்சியர் (District Collector)
- மாநில அரசுப் பணிகள்: உயர் நிர்வாகப் பணிகளுக்கு வாய்ப்பு.
- இந்திய ஆட்சிப் பணி (IAS): BDO பணியாளர்கள் தேர்வுகள் மூலம் IAS ஆகவும் முடியும்.
BDO பனியின் நன்மைகள்:
- அரசு பணியாக இருப்பதால் நிரந்தரமான வேலையாக இருக்கிறது.
- பணி ஓய்விற்கு பிறகு ஊவூதியம் வழங்கப்படுகிறது.
- பணி ஓய்வில் ஒரு மொத்தமான தொகை கிடைக்கும்.
BDO தகுதி:
- இந்த பணிக்கு டிகிரி படித்திருக்க வேண்டும்.
- தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும்.
- இந்த பணிக்கு குறைந்தபட்ச வயது 21 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |