RDO Officer Salary in Tamil
பொதுவாக அரசு வேலை பெற வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருக்கும். இதற்கு காரணம் நல்ல சம்பளம் மற்றும் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது தான். ஆனால் என்றாவது அரசு அதிகாரிகளின் மாத சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று சிந்தனை செய்திருக்கிறீர்களா..? அப்படி சிந்தனை செய்தவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அரசு அதிகாரிகளின் சமபளம் எவ்வளவு என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் RDO Officer அதாவது ஊரக வளர்ச்சி அதிகாரியின் சம்பளம் எவ்வளவு என்பதை பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் தொகுதி கவுன்சிலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா
RDO Officer Salary Per Month in Tamil:
ஊரக வளர்ச்சி அதிகாரி வேலை என்பது அரசு வேலை விண்ணப்பதாரர்களிடையே மிகவும் பிரபலமான பணியிடங்களில் ஒன்றாகும். பொதுவாக இந்த ஊரக வளர்ச்சி அதிகாரியின் பணி என்னவென்றால் கிராமப்புறங்களில் அரசின் செயல்பாடுகளை ஊரக வளர்ச்சி அலுவலர் செயல்படுத்துகிறார்.
மேலும் ஊரக வளர்ச்சி அலுவலரின் மற்றொரு பணி, கிராம மக்களுடன் உரையாடுவது, அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றை தீர்ப்பது ஆகும்.
இப்பொழுது அவரின் சம்பளம் என்னவென்று பார்க்கலாம். ஒரு ஊரக வளர்ச்சி அதிகாரியின் ஆரம்ப சம்பளம் சுமார் 20,200 ரூபாய் ஆகும். இந்த ஊதியம் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஊதியக் குழுவின் படி வழங்கப்படுகிறது.
மற்ற அரசு அதிகாரிகளை போலவே இவர்களுக்கும் பதவி உயர்வு ஓய்வூதியம் கிடைக்கும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> VAOவின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |