ரயில் ஓட்டுனர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது தெரியுமா?

Advertisement

ரயில் ஓட்டுநர்கள் சம்பளம் | Loco Pilot Salary in India Per Month in Tamil

ஹாய் நண்பர்களே வணக்கம்.. தினமும் ஒவ்வொரு பணிகளுக்கான சம்பளம் விவரங்களை பற்றி பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது என்னவென்றால் ரயில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் மாதம் சம்பளம் எவ்வளவு மற்றும் அவர்கள் சந்திக்கும் சவாலான விஷயங்கள் என்னென்ன என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க..

ரயில் ஓட்டுநர்கள் சம்பளம்:

  • ரயிலை ஓட்டுபவர்களுக்கு LP அதாவது Loco Pilot என்றும், அவர்களுக்கு உதவி செய்பவர்களை ALP அதாவது Assistant Loco Pilot என்றும் அழைப்பார்கள். இவர்களுடைய வேலை நேரம் என்பது கிட்டத்தட்ட 13 முதல் 16 மணி நேரம் வரை இருக்கிறது.
  • இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் விவரங்களை இப்பொழுது பார்க்கலாம் Loco Pilot-க்கு ஆரம்ப சம்பளம் 19,000 ரூபாய் ஆகும். இவர்களின் சம்பளம் 7வது ஊதிய முறைப்படி நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனுடன் அகவிலைப்படி(DA),வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA),மருத்துவ செலவுகள், போக்குவரத்து செலவுகள் கூடுதலாக வழங்கப்படும். இதன்படி பார்த்தால், புதிதாக சேர்ந்த லோகோ பைலட்டுக்கு மாதம் ரூ.24,000/- முதல் ரூ.35,000/- வரை வழங்கப்படும்.
  • சீனியர் லோகோ பைலட்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.70,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ரயில் ஓட்டுனர்களுக்கு வழங்கப்படும் உயர் பதவிகள்:

Loco Pilot

  1. புதிதாக APL ஆகத் தனது பணியை தொடக்கி 6 முதல் 8 வருட அனுபவத்திற்குப் பிறகு Assistant Loco Pilot முன்னேறுகிறார்கள்.
  2. 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவையில் உள்ள மூத்த ALP-கள் லோகோ-பைலட் பதவிக்கு உயர்த்தப்படுகின்றனர்.
  3. 10 முதல் 15 ஆண்டு ரயில்வே அனுபவம் கொண்ட LP இந்திய ரயில்வேயின் நிர்வாக மற்றும் நிர்வாகத் துறைகளில் முன்னேறுவதற்கு தகுதியுடையவர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
VAO-வின் சம்பளம் மற்றும் அடுத்தடுத்த உயர் பதவிகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா?

ரயில் ஓட்டுனர்களின் வருட சம்பளம் மற்றும் வருட அனுபவரங்கள்:

அனுபவ ஆண்டுகாலம் சராசரி ஆண்டு சம்பளம் (INR)
0-2 ஆண்டுகளுக்கு  2.40 லட்சம் வழங்கப்படும் 
2-5 ஆண்டுகளுக்கு  7.60 லட்சம் வழங்கப்படும் 
5-10 ஆண்டுகளுக்கு  6 லட்சம் வழங்கப்படும் 
10-15 ஆண்டுகளுக்கு  9 லட்சம் வழங்கப்படும் 
15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் 12 லட்சம் மற்றும் அதற்கு மேல் வழங்கப்படும் 

ரயில் ஓட்டுனர்களுக்கு விதிமுறைகள் மற்றும் சவால்கள்:

ஒரு LP மற்றும் ALP-க்கு இவர்களது பணி நேரம் முடிந்து அடுத்த டியூட்டிக்கு வருவதற்கு இவர்களுக்கு 16 மணி நேரம் இடைவெளி குடுப்பார்களாம்.

ஒரு LP அல்லது ALP ஜார்ஜ் எடுத்துக்க வேண்டும் என்றால் அவுங்க ஒட்டக்கூடிய ரயில் அந்த ரயில் நிலையத்திற்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் இவர்கள் அந்த ரயில் நிலையத்தில் தயாராக நிற்க வேண்டுமாம்.

LP அல்லது ALP அவர்களது பணி நேரத்தில் தூங்க முடியுமா என்றால் கண்டிப்பாக தூங்க முடியும் ஆனால் ஒருவர் மட்டும் தான் தூங்க முடியும். மற்றொருவர் ரயிலை இயக்க வேண்டும். ஒரு வேலை இருவரும் ரயிலில் தூங்கிவிட்டார்கள் என்றால் ஒவ்வொரு ரயிலுள்ளும் VCD என்ற பட்டன் இருக்கும். VCD-யின் Full Form Vigilance Control Device ஆகும். இந்த VCD பட்டனை ஒவ்வொரு நிமிசத்திற்கு ஒரு முறை LP அல்லது ALP அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அடுத்த 8 நிமிடத்தில் அவற்றில் இருந்து Light On ஆகும். அதன்பிறகு அலாரம் சவுண்டும் அடிக்க ஆரம்பிக்கும். அலாரம் அடித்தும் இருவரும் எழவில்லை என்றால் Automatic Brake System மூலம் ரயில் தானாக Off ஆகிவிடும்.

ஆனால் LP ஏதாவது வேலையாக இருந்தால் அதாவது Brake போடுவது, வண்டியின் வேகத்தை குறைப்பது அல்லது அதிகரிப்பது இதுபோன்ற வேலையில் இருந்தால் அந்த VCD பட்டனை அழுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரையும் ரயில்வே ஓட்டுனர்களுக்கு என்று தனி கழிப்பறை கிடையாது அடுத்த ஸ்டேஷன் வரும் வரை ஓட்டுனர்கள் இயற்கை உபாதைகளை பொறுத்துக்கொள்ள தான் வேண்டும்.

ரயில் ஓட்டுனர்களுக்கு பஞ்சுவாலிட்டி (Punctuality) என்பது மிகவும் அவசியம்.

ரயில் ஓட்டுனர்களுக்கு பல வகையான விதிமுறைகளும், சவால்களும் இருக்கும். இதையெல்லாம் அதையெல்லாம் சரியாக கடைபிடிக்கவில்லை என்றால் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
உங்கள் தொகுதி கவுன்சிலர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 Salary and Promotion Details in Tamil
Advertisement